”அம்மாவை தப்பா பேசிட்டாங்க! நான் இளவரசர் இல்ல ராகுல்” எமோஷனல் ஆன மோடி
காங்கிரஸ் மற்றும் RJD கட்சியினர் எனது தாய் பற்றி அவதூறாக பேசியிருக்கிறார்கள்
அவர்கள் எனது தாயை மட்டும் அவமானப்படுத்தவில்லை
கோடிக்கணக்கான தாய்மார்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்
ஏழைத் தாயின் தவமும், அவரது மகனின் வேதனையும் ராஜ குடும்பத்தில் பிறந்த இளவரசனுக்கு புரியாது
இவர்கள் எல்லாம் பிறக்கும் போதே பணக்காரர்களாக இருந்தவர்கள்
இந்த நாட்டின் அதிகாரம் அவர்களது குடும்ப பரம்பரையிடம் இருப்பதாக நினைக்கிறார்கள்
அவர்கள் மட்டும் தான் அதிகார இருக்கையில் அமர வேண்டும் என நினைக்கிறார்கள்
ஆனால் நீங்கள் ஏழைத்தாயின் மகனை பிரதமராக உங்களுக்கு சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளீர்கள்
இந்த பணக்காரர்களால் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை
பிற்படுத்தப்பட்ட ஒருவர் முன்னேறி வந்துள்ளார்
காங்கிரஸ் கட்சியால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
அவர்களை போல் பிரபலமானவர்கள் உழைப்பவர்களை துஷ்பிரயோகம் செய்யலாம் என நினைக்கிறார்கள்
அதனால் தான் தினமும் என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்கள்
அவர் என்னை பற்றி தினமும் மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்
இது நீண்டு கொண்டே செல்கிறது
அவர்களது தலைவர்கள் எல்லாம் இதை தான் செய்தார்கள்
அவர்களின் வெறுப்பும் ஆணவமும் என்னை போன்றவர்களின் மீது வெளிப்படுகிறது
சில சமயம் என்னை தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்
தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள்
விஷப்பாம்பு என சொல்கிறார்கள்
நீங்களும் கேட்டிருப்பீர்கள்
பீகார் தேர்தல் பிரச்சாரத்திலும் மோசமாக பேசுகிறார்கள்
ஆனால் அவர்களது குணம் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது
மறைந்த எனது அம்மாவை பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்
அவர் தற்போது உயிருடன் இல்லை
அரசியலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஆனாலும் அவரை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்