ஊழலில் சிக்கிய கணவன்மேயரை புறக்கணித்த PTR பற்றி எரியும் மதுரை திமுக | Mayor | Madurai | MK Stalin
மதுரை வரிமுறைகேடு விவகாரம் தொடர்பாக மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேயரை புறக்கணித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு புகாரில் மதுரை மேடர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திராணி பொம்மை மேயராகவே செயல்பட்டு வருவதாகவும், அவரது கணவர் பொன் வசந்த் தான் நிர்வாக பணிகளை கையில் எடுத்துள்ளதாகவும் ஏற்கனவே திமுக தலைமை காதுகளுக்கு புகார் சென்றுள்ளது. பொன் வசந்தை திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. மேயர் இந்திராணி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என சொல்கின்றனர். அதனால் அமைச்சர் மூர்த்தி தரப்புக்கும் மேயருக்கும் மோதலும் இருந்து வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது.
மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சரின் தீவிர ஆதரவாளரான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் நிகழ்ச்சியில் மேயர் இல்லாமலே நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்து குறைகள் கேட்டு தொகுதி உரித்தான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி இல்லாமல் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உடன் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு மத்திய தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடன் மேயர் இந்திராணி பங்கேற்றார். ஆனால் தற்போது மத்திய தொகுதியின் அமைச்சரான பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களை சந்திக்கும் போது மேயர் இந்திராணியை தவிர்த்து ஆணையாளர் மட்டும் உடனிருந்தது பேசும் பொருளாகி உள்ளது.