”என்னையே SUSPEND பண்றியா” BRS-ல் இருந்து விலகிய கவிதா புதிய கட்சி தொடங்க முடிவு? | Kavitha Resigns from BRS

BRS கட்சியிலிருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட் நிலையில், கவிதா, இன்று பி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கவிதா புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததற்காக தந்தையும் கட்சி தலைவரான கேசிஆர்-ல் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். கவிதா தனது இடைநீக்கத்திற்கு முன்னர் பிஆர்எஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் . கேசிஆர்-இன் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார். கட்சியின் மூத்த தலைவர் டி. ஹரிஸ் ராவ் மற்றும் முன்னாள் எம்பி மேகா கிருஷ்ணா ரெட்டி மீது கவிதா கடுமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்திருந்தார். மேலும் ஊழல் வழக்கில் தனது தந்தயே பலிகடா ஆக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும் கவிதாவே ராஜினாமா செய்வதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.

கவிதாவின் இடைநீக்கம் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பி.ஆர்.எஸ். தெரிவித்திருந்தாவது கவிதாவின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கட்சி விரோதப் பணிகள் பி.ஆர்.எஸ்.-க்கு தீங்கு விளைவிக்கின்றன. கட்சித் தலைமை இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ், உடனடியாக கட்சியில் இருந்து கே. கவிதாவை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2023 ஆம் ஆண்டு பி.ஆர்.எஸ் தோல்விக்குப் பிறகு, கட்சியின் உள் விவகாரங்களை கவிதா வெளிப்படையாக விமர்சித்தார் . இது சந்திரசேகர் ராவ் மற்றும் பிற தலைவர்களால் ஒழுக்கமின்மை என்று கருதப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியையும் கவிதா எதிர்த்தார். இதனுடன், அவர் பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு எதிராக பொது அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டதாகவும் கூறி உள்ளார். மேலும் கவிதா புதிய கட்சி தொடங்க உள்ளதாக கட்சியின் பெயர் தெலங்கான பகுஜன ராஷ்ட்ர சமிதி என தகவல்கள் வெளியாகி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola