Chandra Priyanka : ‘’டார்ச்சர் செய்யும் அமைச்சர்கள்அலட்சியம் காட்டும் போலீஸ்’’MLA பிரியங்கா பகீர்
முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, இரண்டு அமைச்சர்கள் தனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஒரு காணொலியை வெளியிட்டுப் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபிரியங்கா, நேற்று சமூக வலைதளமான முகநுாலில் வெளியிட்டுள்ள உருக்கமான 30 நிமிட வீடியோ, புதுச்சேரியின் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில்., பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி, ஆங்காங்கே ஒருவருக்கு ஒருவர் போடி போட்டுக் கொண்டு பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் எனக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தது. அதில், பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக எஸ்.எஸ்.பி., எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கொம்யூன் ஆணையர் மற்றும் அந்த பேனரில் எனது படம் இருந்ததால், நானும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.