SV Sekar | ”மாமா-னு பேசுறியே பா”பேரனை வைத்து விஜயைபங்கம் செய்த S.Ve.சேகர்
தவெக தலைவர் விஜயை கலாய்த்து தனது சொந்த பேரனை வைத்து நடிகர் எஸ்.வி சேகர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு நடந்த இரண்டாவது மாநாடு விஜய் மீதும் அவரது அரசியல் கொள்கை மீது பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. வழக்கமாக விஜய் பேசுவதை ரசித்து கேட்டு வந்த பலர் இந்த முறை அவர் கொஞ்சம் எல்லை மீறி பேசியதாக கருதுகின்றன. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்டாலின் அங்கிள் என்று விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரின் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் விஜயை ட்ரோல் செய்து தனது சொந்த பேரனை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து பேசினார். காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார் , ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் குமார், சென்னை நகராட்சி பணியார்களின் போராட்டம் என பேசுவதற்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கையில் விஜய் திமுக மற்றும் பாஜகவை விமர்சிப்பதும் சுய பெருமை பேசுவதற்காகவே மதுரையில் இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்தியுள்ளார். கூடுதலாக வைரலாகும் என்று தெரிந்தே அவர் முதலமைச்சரை 'ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள் , வெரி ராங் அங்கிள்' என்று பேசினார். ஆனால் சென்ற முறை விஜய் பேசியதை ரசித்த பலருக்கு இந்த முறை அவரது பேச்சு உவப்பானதாக இல்லை. இதனால் பல அரசியல் தலைவர்கள் விஜயின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மதுரை மாநாட்டில் ஊடகவியலாளர் முக்தாரை தவெகவினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர் . இதனைத் தொடர்ந்து நடிகர் எஸ்.வி சேகருடன் இணைந்து முக்தார் விஜயை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவில் விஜய் மற்றும் அவரது தந்தையை தகாத முறையில் இருவரும் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது பேரனை வைத்து விஜயை கலாய்த்து வீடியோ வெளியீட்டுள்ளார். இந்த வீடியோவில் தனது பேரனிடம் 'தம்பி உன் பேரு என்ன ' என்று அவர் கேட்க அந்த சிறுவன் 'முரளி மாமா' என பதிலளிக்கிறார். இந்த வயசிலேயே உறவு முறை வைத்து பேசுற பிற்காலத்தில் நீ கட்சி ஆரம்பித்தால் பெரிய ஆளா வருவ ' என எஸ்வி சேகர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது