Ajith Racing Viral Video : ’’தம்பி AUTOGRAPH போடுப்பா’’சிறுவனிடம் கேட்ட அஜித்வைரல் வீடியோ
நடிகர் அஜித் 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு..சமீப காலமாக நடிப்பை தாண்டி பைக் ரேஸிங் மற்றும் கார் ரேஸிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது ரேஸிங் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மனம் கவர்ந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன், துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டு 3 வது இடம் பிடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டார். தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அங்கு 13 வயது சிறுவன் ஒருவனிடம் அஜித்குமார் ஆட்டோகிராப் கேட்டு வாங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த 13 வயது ஜேடன் இம்மானுவல். இவர் ஜெர்மனியில் நடந்த FIM மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் 3ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் ஜேடனை நேரில் சந்தித்த அஜித் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதோடு, இது உன்னோட வின்னிங் கேப்பா என ஜேடனிடம் கேட்ட அஜித், உன்னோட டேட் ஓட உன்னோட ஆட்டோகிராஃப் போட்டுக்கொடு என அன்பாக கேட்டுள்ளார். ஜேடனும் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுக்க தேங்யூ சொல்லி அதனை பெற்றுக்கொண்டார் அஜித்..அஜித்குமார் 13 வயது சிறுவன் ஜேடனிடம் ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.