MALL போல் கட்டப்பட்டுள்ள பென்னாகரம் அரசு மருத்துவமனை உள்ள அப்படி என்ன SPECIAL? | Goverment Hospital
பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நவீன வசதி கொண்ட மகப்பேறு பிரிவு கட்டிடம்-கர்பினிகளை கவரும் வகையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் வரவேற்பிடம், செல்ஃபி பாய்ண்ட், வண்ண ஓவிய ஸ்டிக்கர் என மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு கென 12 கோடி ரூபாய் மதிப்பில் 40 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டது. இதனை கடந்த 17ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் 3 அடுக்குகளுடன், ரத்த பரிசோதனை செய்யும் ஆய்வகம், ஸ்கேன் செய்யுமிடம், கர்ப்பிணிகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு கவனிப்பதற்கு உண்டான அரங்கு, குழந்தைகளை கவனிப்பதற்கான அரங்குகள், கர்ப்பிணிகளின் உதவியாளர்களுக்கும் படுக்கை வசதிகள் என பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் உள்ளே உள்ள வசதிகள் மற்றும் பிரிவுகள் குறித்த விவரங்கள் வெளியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் திறந்தவுடன் கர்ப்பிணிகளை வைத்து, குத்து விளக்கேற்றி புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மருத்துவமனையில் நவீன வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவமனையை மேலும் அழகுப்படுத்தி, மகப்பேறுக்காக வருகின்ற கர்ப்பிணிகளை மருத்துவமனை போன்று உணராமல், புதுமையாக மருத்துவர்களின் முயற்சியால் அழகுப்படுத்தி உள்ளனர்.
வரவேற்பு அறையில் மூங்கில் அழகு செடிகள், வண்ண விளக்குகள்
கர்ப கால புறநோயாளிகள் பிரிவில், கர்ப்பிணிகளை கவரும் வகையில் வண்ணத்துப்பூச்சி ஸ்டிக்கர்
பிரசவத்திற்கு பிறகு கவனிக்கும் மருத்துவர் அறையில், தோகை விரித்தாடும் மயில், குருவிக் கூட்டில் குருவி குஞ்சுகள் இருப்பது போன்ற அழகிய ஓவியங்கள்
கர்பிணிகளின் உதவியாளர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கான இடத்தில் கற்களை அமைத்து அழகு செடிகள்
மருத்துவமனை கர்ப்பிணிகளும், உதவியாளர்களும் ஒரு பொழுதுபோக்கு இடம் போல உணர முடிகிறது
இந்த புதிய மகப்பேறு கட்டிடத்தில் தனியார் மருத்துவமனையை மிஞ்சுகின்ற வகையில் நவீன வசதிகளும்
நோயாளிகளை கவருகின்ற வகையில் மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது