PMK Lawyer Attack Police : போலீஸ் கன்னத்தில் பளார்!எல்லைமீறிய பாமககாரர் பகீர் வீடியோ

சென்னையில் விசாரனைக்கு சென்ற காவல் அதிகாரியை பாமக வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை நொளம்பூர் காவல் நிலையம் எதிரே ஜெய் பாரத் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக 100 எனும் அவசர உதவி எண்ணுக்கு புகார் வந்துள்ளது. 

இந்த புகாரின் பேரில் காவலர் பாலாஜி அக்குடியிருப்புக்கு விசாரணைக்கு சென்றுள்ளார். குடியிருப்புவாசிகளுக்கு இடையேயான பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற காவலர் பாலாஜியுடன் அக்குடியிருப்பை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து, பாமக வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் காவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பலமாக தாக்கினார். இவர்தான் இந்த அடுக்கு மாடி குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமக வழக்கறிஞர் காவல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

சென்னையில் விசாரனைக்கு சென்ற காவல் அதிகாரியை பாமக வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola