அமித்ஷா போட்ட மீட்டிங்! புறக்கணித்த அண்ணாமலை! நிர்மலா மீது கோபம்?

அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக பாஜகவின் முக்கிய புள்ளிகள் டெல்லியில் வைத்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மீட்டிங்கில் அண்ணாமலை மட்டும் ஆப்செண்ட் ஆகியுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடப் போவதில்லை என்றும் டெல்லி தலைமை வேறு சில ப்ளான்களை வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். அதேபோல் நிர்மலா சீதாராமன் மீது தலைமைக்கு புகார் ஒன்றை அண்ணாமலை அனுப்பியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து இறங்கிய பிறகு அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி எதுவும் கிடைக்காமல் இருக்கிறது. அவரை தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும் என அமித்ஷா வாக்கு கொடுத்தும் எதுவும் செய்யாமல் இருப்பதால் ஆதரவாளர்கள் கடுப்பில் இருக்கின்றனர். சமூக வலைதளங்களிலும் நயினார் மற்றும் நயினார் தரப்பினர் நேரடியாகவே மோதிக் கொள்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் வெடிக்கும் நிலையில், டெல்லியில் ஆலோசனை நடத்துவதற்கு தமிழக பாஜகவினருக்கு அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்தார். அதன்படி நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அமித்ஷா இல்லத்தில் நடந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். ஆனால் இதில் அண்ணாமலை கலந்து கொள்ளாதது விவாதத்தை கிளப்பி வைத்துள்ளது. அதிகமான திருமண நிகழ்வுகள் மற்றும் வேலைகள் இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அண்ணாமலை பேசியிருப்பது கூடுதல் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

நிர்மலா சீதாராமன் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அண்ணாமலை இந்த கூட்டத்தை புறக்கணித்திருப்பதாக சொல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த நிர்மலா, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திலும் அண்ணாமலை கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அப்போது நிர்மலா சீதாராமன் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களை விமர்சனம் செய்து இந்த கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அண்ணாமலை காதுகளுக்கு சென்றதும், நிர்மலா சீதாராமன் என்னை பற்றி எப்படி பேசலாம் என டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இந்த நேரத்தில் அமித்ஷாவும் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் அண்ணாமலை அதில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். பாஜகவினருக்கு சில முக்கிய ஆர்டர்களை அமித்ஷா போட்டுள்ளதாக தெரிகிறது. உட்கட்சி பூசலை ஓரங்கட்டிவிட்டு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், அதிமுகவுக்கு ஒத்துழைப்பு கொடுத்த தேர்தலில் பணியாற்ற வேண்டும், யார் யாரையெல்லாம் கூட்டணி பக்கம் கொண்டுவர முடியும் என பேச்சுவார்த்தை நடத்துங்கள் என முக்கிய உத்தரவுகள் அமித்ஷாவிடம் இருந்து வந்துள்ளது. 

அதோடு சேர்த்து அண்ணாமலை வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அமித்ஷா சொன்னதாக கூறப்படுகிறது. அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப் போகிறோம் எனவும் சொல்லியுள்ளார். ஆனால் மாநில அரசியலில் அண்ணாமலைக்கு ஆர்வம் இருப்பதாகவும், அதிமுக மற்றும் பாஜக சீனியர்களின் புகார்களால் தான் அண்ணாமலையை தேசிய அரசியலுக்கு கொண்டு வர அமித்ஷா கணக்கு போடுவதாகவும் தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை எங்கு போட்டியுடுவார் என விவாதித்து வந்த ஆதரவாளர்களுக்கு இந்த தகவல் ஷாக்கை கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola