Inbanithi Red Giant | உதயநிதி பாணியில் மகன்! இன்பநிதி சினிமாவில் ENTRY! வெளியான முக்கிய அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பன் உதயநிதி சினிமாத்துறையில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு மதுரை அலங்கா நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பேட்டியின் போது தந்தை உதயநிதியோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை நேரடியாக கண்டு ரசித்தார். அதேபோல், அரசு நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது தலையைகாட்டி வருகிறார்.
இதனிடையே, லண்டனில் படித்து வந்த இவருக்கு சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பு ஒன்று கொடுக்கப்பட்டதாகவும் இவருக்கென்று தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தான் இன்பன் உதயநிதி சினிமாத்துறையில் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அது சமூக வலைதளங்களிலும் வைரலானது. இச்சூழலில் தான் தற்போது சினிமாத்துறையில் குதித்துள்ளார் இன்பன் உதயநிதி. அந்த வகையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படத்தின் மூலம் விநியோகஸ்தராக இன்பன் களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛இட்லிகடை' திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியீடுகிறது. புதிய பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ள இன்பன் உதயநிதிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 1 வெளியாவது குறிப்பிடத்தக்கது