”உனக்கு என்ன தெரியும்! இந்தியாவை வச்சு பழிவாங்குனேன்” செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்
ரஷ்யா பற்றி கேள்வி கேட்ட போது இந்தியாவை சீண்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்
ரஷ்ய அதிபர் புதின் மீது உங்களது அதிருப்தியையும், விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள்
ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உங்களுக்கு எப்படி தெரியும்?
நீங்கள் யார்- ட்ரம்ப்
நான் போலந்து மீடியா- செய்தியாளர்
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எப்படி சொல்கிறீர்கள்?
இந்தியா மீது அதிக வரி விதித்துள்ளோம்
சீனாவுக்கு அடுத்து இந்தியா தான் ரஷ்யாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது
கிட்டத்தட்ட 2 நாடுகளும் ஒரே அளவில் தான் வாங்குகின்றன
அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்கிறீர்களா?
இதனால் ரஷ்யாவுக்கு பில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்படும்
நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்கிறீர்களா?
நான் இன்னும் இரண்டாம் கட்டத்தை முடிக்கவில்லை
இதில் மூன்றாம் கட்டமும் இருக்கிறது
அப்படியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீங்கள் சொன்னால், வேறு வேலையை தேடிக் கொள்ளுங்கள்
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் பெரிய பிரச்னையை சந்திக்கும் என சொல்லியிருந்தேன்
இதுதான் நடந்து கொண்டிருக்கிறது
அதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என என்னிடம் சொல்லாதீர்கள்