திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
திண்டுக்கல்லில் சூட்டிங்கிற்கு வந்த தனுஷை சூழ்ந்து கொண்ட ரசிகர்களால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
திண்டுக்கல் மாவட்டம், பழனி ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 54-ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு இரவு நடைபெற்றது.
மாலை முதலே தனுஷை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஹோட்டலைச் சுற்றி திரண்டனர். பலர் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் காத்திருந்தனர். இரவு ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்தபோது இடையில் கேரவன் செல்வதற்காக வெளியே வந்த தனுஷைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி கை அசைத்து நன்றி தெரிவித்தார்.
இதனால் பழனி ரோடு பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர்செய்தனர். தனுஷின் அடுத்தடுத்த ஷெட்யூல்களும் திண்டுக்கல் பகுதியிலேயே நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் உற்சாகம் தொடர்கிறது.





















