இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
சூஃபிசம் என்றால் என்ன? இசைப்புயல் AR ரஹ்மான் சூஃபிசத்தை நாடியது ஏன்? இந்த ஆன்மீகப் பயணம் பற்றிய பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்
சூஃபிசம் என்பது இஸ்லாம் மதத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட ஆன்மீகப் பாதை. "சூஃபிசம் என்பது இறப்பதற்கு முன் இறப்பது போன்றது. உங்கள் சுயத்தை நீங்கள் பிரதிபலிக்க பல்வேறு திரைகளை அகற்றி நீங்கள் அழிய வேண்டும். உங்களுக்குள் இருக்கும் காமம், பேராசை, பொறாமை, மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்கும் மனப்பான்மை அனைத்தும் மடிய வேண்டும். இதற்கு பின் உங்கள் ஈகோ மொத்தமாக அழிந்து, நீங்கள் இறைவனை போல தூய்மையானவர்களாக மாறலாம். ரஹ்மான் இதை, "இறப்பதற்கு முன் இறப்பது" என்று மிக அழகாகக் கூறுகிறார். நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, இறைவனின் ஒளியாக மாறுவதே இதன் மையக் கருத்து.
இசைப் புயலின் வாழ்வில் அமைதியைத் தேடிய போது ஒரு புதிய தொடக்கம் தான் சூஃபிசம். அவரது தந்தை, ஆர்.கே. சேகரின் மறைவுக்குப் பிறகு, அந்தத் துயரத்திலிருந்து விடுபட ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார். அங்குதான் அவர்களுக்கு ஒரு சூஃபி துறவியின் வழிகாட்டுதல் கிடைத்தது. ரஹ்மானும் அவரது தாயார் கஸ்தூரியும் அந்தத் துறவியின் போதனைகள், ஆழமான அமைதி அவர்களை ஈர்த்தது. ரஹ்மான் அனைத்து மதங்களையும் கற்றவர். ஆனால், வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உள்ள பக்தியின் பொதுவான தன்மை மற்றும் ஒற்றுமை உணர்வு ஆகியவற்றை சூஃபிசம் தெளிவாக முன்வைத்தது.
பல மதங்களைப் பற்றிப் படித்திருந்தாலும், ஒரு தெளிவான ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஏ.ஆர். ரஹ்மான் அனைத்து மதங்களின் மீதும் மதிப்பு வைத்திருந்தாலும், சூஃபிசம் அவருக்குப் பிடித்ததற்குக் காரணம், அது பக்தியின் நேர்மையையும், மனிதர்களிடையே உள்ள ஒற்றுமை உணர்வையும் வலியுறுத்தியது தான் என சொல்லப்படுகிறது.. சூஃபிசத்தின் மையக் கருத்தான அகங்காரம், பேராசை போன்ற திரைகளை விலக்கி, தன்னைத் தானே பிரதிபலிக்கும் அதாவது Self-reflection அவரை மிகவும் கவர்ந்ததாக கூறப்படுகிறது...
மேலும், "ஒரே ஒரு தெளிவான ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுப்பது நல்லது" என்ற எண்ணமும், கர்வத்தை தாண்டி ஆன்மீக ரீதியாக உயர்ந்து செல்லவேண்டும் என்ற உத்வேகமும் அவரை சூஃபி இஸ்லாத்தைத் தழுவச் செய்ததுள்ளது.





















