மேலும் அறிய

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காணலாம்

இடுக்கி அணையை பார்க்க 2025 மே 31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக நீர் வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.

இடுக்கி மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைமையகம் பைனாவு நகரத்தில் உள்ளது. இடுக்கி மாவட்டம் கேரளத்தின் மிகப் பெரிய மாவட்டமாக உள்ளது. இது கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும் ஏறத்தாழ 20%. தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலா வட்டங்களில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி ஏறத்தாழ 50% காடுகளும் மலைகளுமே. மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகியவை மாவட்டத்தின் இரண்டு உத்தியோகபூர்வ நிர்வாக மொழிகள். இடுக்கி மாவட்டத்தில் மலையாளத்திற்கு அடுத்தபடியாக தமிழ் அதிகமாக பேசப்படும் மொழியாகும்.

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காணலாம்

குறிப்பாக இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும். ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கேரள மின் வாரிய அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தலைமையில் ஆய்வு குழு கடந்த மாதம் இடுக்கி அணையை  நேரில் பார்வையிட்டனர். அதனையடுத்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று வெளியிட்டது. இதில்  இடுக்கி, செருதோணி அணைகளை புதன், தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர அனைத்து நாட்களில் பொதுமக்கள் காண மூன்று மாதங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காணலாம்

ஒரே நேரத்தில் 20 பேர் அனுமதிக்கப்படுவர். மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும். கடும் மழைக்கான வானிலை முன்னெச்சரிக்கைகள் (எல்லோ, ஆரஞ்ச் அலர்ட்டுகள்) விடுக்கப்படும் நாட்களிலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடுகள் விடுக்கும் நாட்களிலும் அனுமதி இல்லை. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும், என கூறப்பட்டிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து அரசு செப்.2ல் உத்தரவிட்ட நிலையில்  புதன் கிழமை தவிர அனைத்து நாட்களிலும் அணையை பார்க்க அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் காணலாம்

இந்நிலையில் அணையை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைத்து நாட்களிலும் பார்க்க அனுமதி அளித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. வாரத்தில் புதன் கிழமை தோறும் பராமரிப்பு பணிகள் நடக்கும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே அணையை காண 2025 மே 31 வரை அனுமதி நீடிக்கப்பட்டது. முற்றிலும் 'ஆன் லைன்' வாயிலாக நுழைவு டிக்கெட் வழங்கப்படுகிறது. எஞ்சிய டிக்கெட்டுகள் செருதோணி அணை நுழைவு பகுதியில் உள்ள ஹைடல் டூரிசம் கவுன்டரில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நுழைவு கட்டணம், பேட்டரி காரில் பயணிக்க என நபர் ஒன்றுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இத்தகவலை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget