Youtube : யூடியூப் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்...இனி ஸ்மார்ட் டிவியில் இதை ஸ்கிப் செய்ய முடியாது...!
யூடியூப் வீடியோக்களில் இடம்பெறும் தவிர்க்க இயலாத விளம்பரங்களின் நீளத்தை 2 மடங்காக உயர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
![Youtube : யூடியூப் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்...இனி ஸ்மார்ட் டிவியில் இதை ஸ்கிப் செய்ய முடியாது...! Youtube advertisement in smart tv here after never skip non stop advertisement Youtube : யூடியூப் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்...இனி ஸ்மார்ட் டிவியில் இதை ஸ்கிப் செய்ய முடியாது...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/21/21db6ec4706bb17e2796a7141c77b3631684651388597333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Youtube : யூடியூப் வீடியோக்களில் இடம்பெறும் தவிர்க்க இயலாத விளம்பரங்களின் நீளத்தை 2 மடங்காக உயர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
யூடியூப்
நவீன தொழில்நுட்பக் காலத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இந்த ஸ்டார்ட் டிவிகளில் பெரும்பாலும் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் மிக குறிப்பாக ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப்பில் தான் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில் யூடியூப்பில் மக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் 250 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயனர்களான இருந்து வருகின்றனர். சாதாரண வீடியோக்கள் தொடங்கி, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், விளையாட்டு, சினிமா சார்ந்த வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன.
முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்பட்ட யூடியூப் தளம் தற்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. இதனால் அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கிப் செய்ய முடியாது
தற்போது வரை யூடியூப்பில் வீடியோ பார்க்கும்போது உள்ளடக்கத்தை பொறுத்து ஸ்கிப் பட்டன் மூலம் அடுத்தடுத்து 15 விநாடி விளம்பரங்கள் காண்பிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த நடைமுறையை கூகுள் நிறுத்தி, ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 விநாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என்றும் 30 விநாடிகள் NON Stop விளம்பரங்களை காண்பிக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விளம்பர கொள்ளை விரைவு தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் இருப்பதாகவும், இந்தியாவில் விரையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் யூடியூப் பிரீமியம் சந்தாவின் கட்டணம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த யூடியூப் பிரீமியம் சந்தாவின் கட்டணம் அமெரிக்காவில் 11.9 டாலர், இந்தியாவில் மாதம் 129 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், ஸ்மார்ட் டிவியில் யூடியூப் பார்க்கும்போது 30 விநாடிகள் வரை விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என்ற அறிவிப்பு பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
PUBG Game: இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு.. அம்சங்கள் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)