Whatsapp: அடுத்தது இதுதான்.. இனிமே கையில செல்போனே வேண்டாமே.. இது வாட்ஸ்-அப் கொடுக்கும் கூல் அப்டேட்..
மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்-அப் செயலி பயனாளர்களுக்காக, மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தகவல் பரிமாற்றத்தில் முக்கிய தொழில்நுட்பமாக மாறியுள்ள, வட்ஸ்-அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் தனிநபர் தரவுகள் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் குறைந்தாலும், பொதுமக்களிடையே வாட்ஸ்-அப் செயலியின் செயல்பாடு குறைந்தபாடு இல்லை. இதனால் தான் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய தொழில்நுட்ப வசதிளை வழங்கி வருகிறது. உதாரணமாக, 256 பேர் மட்டுமே ஒரு வட்ஸ்-அப் குழுவில் சேர முடியும் என்றிருந்த எண்ணிக்கை வரம்பு, 512 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
அடுத்தடுத்து வந்த புதிய அப்டேட்கள்:
பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, பயனர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பில் மெட்டா நிறுவனம் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுன்செய்திகள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே பார்ப்பது போன்ற அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சமும், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதியும், மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.
லிங்க்ட் டிவைசஸ் வசதி:
வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு அம்சங்களில், லிங்க்ட் டிவைசஸ் வசதி குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், செல்போனில் பதிவு செய்துள்ள வாட்ஸ்-அப் கணக்கை, கணினியிலும் இணைத்து பயனாளர்கள் பயன்படுத்த முடியும். இதன் மூலம், அலுவலகங்களில் வேலை செய்யும் நேரத்திலும் செல்போன் இன்றி, பயனாளர் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்த முடியும். இந்நிலையில், இந்த அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சத்தை பரிசோதிக்கும் பணிகளை மெட்டா நிறுவனம் தொடங்கியுள்ளது.
புதிய Calls Tab வசதி:
விண்டோஸ் செல்போன்களில் பயன்படுத்தக்கூடிய வட்ஸ்-அப் பீட்டா செயலியில், அண்மையில் சைட் பார் வசதி வழங்கப்பட்டது. இதன் மூலம் chat list, status updates மற்றும் settings போன்ற விவரங்களை எளிதில் அணுக முடிந்தது. தற்போது ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தொடர்பான விவரங்களை பயனாளர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், விண்டோஸ் செல்போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் பீட்டா செயலியில் உள்ள சைட் பாரில் Calls Tab எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போதைய சூழலில் ஒரு சில பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பீட்டா பயனாளர்கள் அல்லாதோருக்கும் இந்த புதிய வசதி வழங்கி பரிசோதிக்கப்பபடும் எனவும் கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, வழங்கப்பட உள்ள புதிய அப்டேட் மூலம் அனைத்து வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கும், Calls Tab வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
2.2240.1.0 என்ற புதிய பீட்டா வெர்ஷன் மூலம், லேப்டாப்புடன் வட்ஸ்-அப் கணக்கை இணைத்து கால் செய்ய முடியும் என கூறப்படுகிறது.அவ்வாறு அழைப்பு மேற்கொள்ளும் போது அது தொடர்பான விவரங்கள், டெஸ்க்டாப்பில் மட்டுமே பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. மொபைலில் அதுதொடர்பான உள்ள ஆப்பில் பிரதிபலிக்காது. இந்த குறை, அனைவருக்குமான அறிமுகத்தின் போது சரிசெய்யப்படலாம் அல்லது அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கிடைக்கும் அடுத்தடுத்த அப்டேட் வழியாக நிவர்த்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.