Whatsapp Web Update | வீட்டிலிருந்து வேலையா? வாட்சப் கொண்டுவந்திருக்கும் சூப்பர் அப்டேட்டை பாருங்க மக்கா..
வாட்சாப் செயலியின் பீட்டா வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு க்ளோபச் வாய்ஸ் நோட் ப்ளேயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டது.
வாட்சாப் பயனாளர்களுக்கு இந்த வாரத்தில் புதிய அப்டேட் ஒன்று கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்சாப் வெப் வெர்ஷனைப் பயன்படுத்துவர்கள் இந்தப் புதிய அப்டேட்டைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வாட்சாப் செயலியின் பீட்டா வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு க்ளோபச் வாய்ஸ் நோட் ப்ளேயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு வழங்கப்பட்டது. உங்கள் கம்ப்யூட்டரில் வாட்சாப் வெப்பைப் பயன்படுத்துவர்களிடம் பீட்டா அப்டேட்டை வைத்திருப்பவர்கள் இந்தப் புதிய அப்டேட்டைப் பயன்படுத்தலாம்.
WABetainfo தளம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வாட்சாப் வெப் பயனாளர்களுக்கு பீட்டா வெர்ஷனை வைத்திருப்பவர்களுக்கு க்ளோபல் வாய்ஸ் நோட் ப்ளேயர் சேர்க்கப்பட்டிருப்பதால், வாய்ஸ் நோட்களை வேறு பணிகளைச் செய்து கொண்ட கேட்பதற்கான வசதி ஏற்கனவே வாட்சாப் வெப் பயனாளர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக வந்திருக்கும் அப்டேட்டில் புதிதாக சேட் லிஸ்டிற்குக் கீழே ஆடியோ ப்ளேயர் ஒன்று சேர்க்கப்படும். மேலும், அந்தப் ப்ளேயரின் இடதுபக்கம் அதனை அனுப்பியவரின் முகம் இடம்பெறும். இந்த வாய்ஸ் நோட் ப்ளேயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இதனைப் பயன்படுத்த வாட்சாப் பீட்டா செயலியின் 2.2204.4.1 அல்லது 2.2204.5 வெர்ஷன்களைப் பயன்படுத்த வேண்டும்.
வாட்சாப் நிறுவனம் இன்னும் இந்த சிறப்பம்சத்தைப் பரிசோதனை செய்து வருகிறது. எனவே வழக்கமாக வாட்சாப் பயன்படுத்துபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். மேலும் அடுத்த சில மாதங்களில் வாட்சாப் நிறுவனம் இந்த அப்டேட்டை அனைவருக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The global audio player is available on WhatsApp Desktop!
— WABetaInfo (@WABetaInfo) February 5, 2022
The ability to listen to voice notes when switching to a different conversation is now available on WhatsApp Desktop beta!https://t.co/kgQihlcSeP
வாட்சாப் வெப் செயலியை உலகம் முழுவதும் பல கோடி பேர் கம்ப்யூட்டரிலும், லேப்டாப்பிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த செயலியின் மூலம், ஃபைல்களை டவுன்லோட் செய்வது, படங்களைப் பகிர்வது, வாய்ஸ் நோட்களைக் கேட்பது ஆகியவற்றை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம்.
வாட்சாப் வெப்பை பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள் தங்கள் மொபைலிலும் வாட்சாப் செயலியை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். எனினும், சில தகவல்களின்படி, விரைவில் வாட்சாப் நிறுவனம் வாட்சாப் வெப் பயன்படுத்துவதற்கு மொபைல் ஃபோன்கள் தேவையில்லை என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப் வெர்ஷன் மூலமாக வாய்ஸ் கால்களை மேற்கொள்ளும் வசதியும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், பல்வேறு பயன்களைத் தரும் ஆற்றல்மிக்க செயலியாக வாட்சாப் வெப் கருதப்படும்.