WhatsApp Update: விரைவில் புதிய அப்டேட்! வாடிக்கையாளர்களை கவர வரும் வாட்ஸ் அப்!
வாட்ஸ் அப் செயலில் விரைவில் அறிமுகமாக உள்ள புதிய வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் விரைவில் வாட்ஸ் அப் செயலியில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் பீட்டா இன்ஃபோ தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இனிமேல் வாட்ஸ் அப் செயலியில் நாம் எப்போதும் கடைசியாக செயலிக்குள் வந்தோம் என்பதை சிலர் மட்டும் பார்க்க முடியாமல் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட சில நபர்களுக்கு நாம் வாட்ஸ் அப் செயலிக்குள் எப்போது வந்தோம் என்பதை பார்க்க முடியாமல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இந்தப் புதிய வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அமலுக்கு வந்துள்ளது. இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியில் ப்ரைவசி வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் அதில் இருக்கும் லாஸ்ட் சீன் என்ற விருப்பதை தேர்வு செய்து மை காண்டாக்ட்ஸ் எக்ஷேப்ட்(My contacts Except) என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதில் சில நம்பர்களை சேர்க்க வேண்டும். இந்த விருப்பத்தின் கீழ் சேர்க்கப்படும் நபர்கள் உங்களுடைய லாஸ்ட் சீனை பார்க்க முடியாது.
இதற்கு முன்பாக வாட்ஸ் அப் செயலியில் லாஸ்ட் சீனை அனைவரும் பார்க்க முடியாமல் செய்யும் வசதி தான் இருந்தது. அத்துடன் நம்முடைய காண்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் படி செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது வாட்ஸ் அப் இந்த அப்டேட் மூலம் விரிவாக்க உள்ளது. மேலும் இதேபோன்று வாட்ஸ் அப் போட்டோ உள்ளிட்டவற்றிற்கும் இதுபோன்ற அப்டேட் விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய அப்டேட் விரைவில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியில் புதிதாக 5 அப்டேட்கள் வர உள்ளதாக கடந்த வாரம் செய்தி ஒன்று வெளியானது. இந்தச் சூழலில் தற்போது இந்த வசதி தொடர்பாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: இனி எல்லாமே பாதியா குறையும்! அமேசான் ப்ரைம் பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்