Whatsapp New Feature: நான்கு ஃபோன்களில் ஒரே அக்கவுண்ட்; வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி..
வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது குறித்த விவரத்தை இங்கே காணலாம்.
வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒரே நேரத்தில் நான்கு ஃபோன்களில் லாக்கின் செய்யும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பர்க் தனது டிவிட்டர் பதிவின் மூலம் உறுதிசெய்துள்ளார்.
ஒன்றிற்கும் மேற்பட்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வசதியை இன்று முதல் பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஃபோன்களில் ஒரே நேரத்தில் வாட்ஸப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படிருந்த நிலையில், இப்போது நான்கு ஃபோன்களில் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.அதாவது இனிமேல், ஒரு எண்ணில் உள்ள வாட்ஸப் கணக்கை நான் ஃபோன்களில் லாக்-இன் செய்யலாம்., மெசேஜ் சிங் ஆப்சனும் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப்:
வாட்ஸப் அப்டேட்களின் ரவுண்ட்-அப்:
Kept Messages வசதி
வாட்ஸப்பில் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் மோட் (Disappearing messages) செயலில் இருக்கும்போது தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காணாமல் போவதை தடுக்கும் விதத்தில் கெப்ட் மெசேஜ் என்ற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்ட்ராய்ட்-இன் Android 2.23.4.10 வர்ஷன் அப்டேட்டில் வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும்.
வாய்ஸ் நோட்: (Voice Note)
ப்ப்பா.. எவ்வளவு டைப் பண்ணிட்டு பேசுறது. பெரிதாக மெசேஜ்களை டைப் செய்ய சிரமப்படும் பயனாளர்கள், குறிப்பிட்ட தகவலை பேசி வாய்ஸ்-நோட் ஆக ரெக்காட் செய்து அனுப்பும் அம்சம் உள்ளது. ஆனால், அந்த நீளமான வாய்ஸ் நோட்டை கேட்க விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். எல்லாருக்கும் வாய்ஸ் மெசேஜ் செய்ய முடியாதில்லையா. அதோடு, ஹெட்-செட் இன்றி பொது இடங்களில் வாய்ஸ்-நோட்டை கேட்க முடியாமல் சிரமப்படுவதும், தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வாய்ஸ் நோட்டை பொதுவெளியில் கேட்க முடியாத சூழலும் உண்டு. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு புதிய அப்டேட்டைத்தான் வாட்ஸ்-அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.