Whatsapp: ஒரு அக்கவுண்ட்.. இரண்டு ஸ்மார்ட்போன்.. வருகிறது வாட்ஸ் அப்பின் சூப்பர் அப்டேட்ஸ்!!
ஏற்கெனவே மல்டி டிவைஸ் ஆப்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த வாட்ஸ் அப் செயலியையும் நிர்வகித்து வருகிறது. வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிதாக அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் விரைவில் வாட்ஸ் அப் செயலியில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் பீட்டா இன்ஃபோ தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்டை இரு வேறு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் புதிய ஆப்ஷன் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஏற்கெனவே மல்டி டிவைஸ் ஆப்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கணினி,செல்போன், டேப் என வெவ்வேறு டிவைஸ்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்.ஆனால் ஸ்மார்ட்போனை பொருத்தவரை ஒரே போனில்தான் பயன்படுத்த முடியும். அந்தக்குறையை போக்கும் விதமாக தற்போது புது அப்டேட் வெளியாகவுள்ளது. தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் இந்த ஆப்ஷன் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக மேலும் சில அப்டேட்களை வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. குழுக்களை பராமரிப்பதற்கும், வாய்ஸ் காலுக்குமாக பல புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கம்யூனிட்டி: இந்த ஆப்ஷன் வழியாக பல்வேறு குழுக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வரலாம்.
எமோஜி ரியாக்ஷன்: சாட்டில் நேரடியாக எமோஜி ரியாக்ஷன்களை சேர்க்கும் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பதைக் குறைக்கலாம்.
க்ரூப் அட்மின்களுக்கு: அட்மின்களுக்கு குரூப்பிலிருந்து தேவையற்ற செய்தியை நீக்கும் அதிகாரம் வழங்கப்படும்.
ஃபைல் பகிர்தல்: முன்னர் 100 எம்பி வரை இருந்த ஃபைல் பகிரும் ஆப்ஷன் தற்போது 2 ஜிபி வரையிலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக வாய்ஸ் கால்: ஒரு க்ரூப் வாய்ஸ் காலில் மொத்தம் 32 பேர் வரை இணையக் கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் 32 நபர்கள் குரூப் வாய்ஸ் காலில் இணைய முடியும். இதுமட்டுமன்றி 2 ஜிபி அளவிளான ஃபைல்களையும் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும். இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம், குரூப் சாட்களை ஒழுங்குபடுத்தி, செய்திகளை நம்மால் எளிதாக கண்டறிய முடியும்.
இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம் தனித்தனி குழுக்களை, ஒரே கம்யூனிட்டிக்கு கீழே கொண்டு வந்த செய்திகளை பார்ப்பதோடு, பகிரவும் முடியும். தற்போது வரை எட்டு பேர் மட்டுமே வாட்ஸ் அப்பில் குரூப் காலில் இணைய முடியும் என்ற நிலைமையும், 1 ஜிபிக்குள்ளான ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும் என்ற நிலைமை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.