WhatsApp Feature: இனி மெசேஜ்களையும் பின் செய்யலாம்...வாட்ஸ் அப்பில் வரப்போகும் அசத்தல் அப்டேட்...!
வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட மெசேஜ்களை பின் (Message Pin Duration) செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
WhatsApp Feature: வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட மெசேஜ்களை பின் (Message Pin Duration) செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ் அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய வசதி
அந்த வரிசையில் தற்போது, வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட மெசேஜ்களை பின் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மெசேஜ் மற்றும் வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பப்பட்டுள்ள முக்கிய மெசேஜ்களை பின் செய்து கொள்ளும்படியாக ஒரு முக்கிய அப்டேட் விரைவில் வர உள்ளது.
இதற்கு முன்பு வரை முக்கிய பயனாளர்களின் மொத்த வாட்ஸ் அப் சாட்டையும் பின் செய்து கொள்ளும் அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி இருந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட ஒரு மெசேஜை மட்டும் பின் செய்து கொள்ளும் வசதியை அப்டேட்டாக மெட்டா வழங்க உள்ளது.
மேலும், குறிப்பிட்ட நேரம் வரை இதனை பின் செய்து கொள்ளலாம் (Message Pin Duration). இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஒரு தனிநபரின் மெசேஜ் மற்றும் குரூப் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்திற்கேற்பு பின் (Message Pin Duration) செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைலன்ஸில் போடும் வசதி:
மேற்குறிப்பிட்ட அம்சம் தற்போது சோதனை முயற்சியில் இருக்கிறது. விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை வாட்ஸ்-அப்பில் தாமாகவே சைலன்ஸில் போடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த, செட்டிங்ஸ் அம்சத்தில் பிரைவசிக்குள் சென்று கால்ஸ் எனும் பிரிவில் “silence unknown calls” என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம், அநாவசிய தொந்தரவுகளை பயனாளர்கள் தவிர்க்கலாம் என, மெட்டா குழும தலைவர் மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க
TN Rain Alert: சில்லென மாறப்போகும் தமிழ்நாடு.. அடுத்த 5 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை..!