மேலும் அறிய

WhatsAp Boost Status feature: வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்.. வணிகத்தை பெருக்க ஸ்டேடஸை பூஸ்ட் செய்யும் வசதி

வாட்ஸ்-அப் பிஸ்னஸ் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் பிஸ்னஸ் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வசதி:

மெட்டா குழுமத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி ஆனது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வணிகர்களுக்கு என பிரத்யேகமாக வாட்ஸ்-அப் பிஸ்னஸ் எனும் பிரத்யேக செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு, அது தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதை மேலும் மேம்படுத்தும்  நோக்கில், "பூஸ்ட் ஸ்டேட்டஸ்" எனும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய வசதியின் பயன்பாடு என்ன?

ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் வாட்ஸ்-அப் பிஸ்னஸ் பயனாளர்களுக்கான புதிய "பூஸ்ட் ஸ்டேட்டஸ்" எனும் அப்டேட் விரைவில்  வழங்கப்பட உள்ளது. இது பயனாளர்களின் புதுப்புது ஸ்டேட்டஸ்களை Facebook மற்றும் Instagram இல் விளம்பரப்படுத்த அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்-கட் நிச்சயமாக வணிகங்களை தங்கள் நிலை புதுப்பிப்புகளை விளம்பரப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. பரந்த பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாகவும், பயனாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை பெறலாம் என கூறப்படுகிறது.

எவ்வாறு செயல்படும்?

  • ஸ்டேடஸ் அப்டேட்களை பகிர்ந்த பிறகு அவற்றை விளம்பரப்படுத்த புதிய ஷார்ட்-கட் திரையில் தோன்றும்
  • பேஸ்புக் பயன்பாட்டிற்கு ஸ்டேடஸ் அப்டேட்களை அனுப்ப  புதிய ஷார்ட்-கட் அனுமதிக்கிறது
  • விளம்பரம் மற்றும் விளக்கத்தைத் திருத்தவும், வணிகம் எவ்வளவு காலம் இயங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கவும் பேஸ்புக்கில் மாற்றங்களை செய்யலாம்

வணிகத்தை பெருக்கும் வசதி:

இவ்வாறு தங்களது ஸ்டேடஸ்களை பகிர்வதன் மூலம் வாட்ஸ்-அப் செயலி மூலமாக மட்டுமின்றி, மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மூலமாகவும் பயனாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், வணிகர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவையை மேம்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்களையும் வழங்கும் என நம்பப்படுகிறது. விளம்பரங்களில் click to WhatsApp எனும் ஆப்ஷனை தொடுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் நேரடியாக வாட்ஸ்-அப் பிஸ்னஸ் செயலி மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் விருப்பமான விளம்பர செயல்பாட்டை மட்டுமே வழங்குவதால், பூஸ்ட் ஸ்டேட்டஸ் மற்ற வாட்ஸ்அப் பயனர்களுடன் பகிரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சூழலில், அடுத்த சில வாரங்களில் அனைத்து பயனாள்ர்களுக்கும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குரூப் சாட்டில் புதிய வசதி:

இதனிடையே, வாட்ஸ்-அப் குழுவில் தெரியாத (கான்டெக்ட் லிஸ்டில் (unknown contacts) இல்லாத நபர் மெசேஜ்) நபர் குறுந்தகவல் அனுப்பினால்,  தொடர்பு எண்ணிற்கு பதிலாக ‘ பயனர் பெயர்’ டிஸ்ப்ளே செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.  WaBetaInfo வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ”ஆண்ட்ராய்டு 2.23.5.12 அப்டேட்டில் வாட்ஸ்-அப் குழு உரையாடலில் தெரியாத நபரிடமிருந்து மெசேஜ் வரும்போது மொபைல் எண்களுக்கு பதிலாக, பயனரின் பெயர் (Username) தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா?  கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Nighttime Anxiety: இரவுநேரத்துடன் போராட்டமா? கவலைக்கான காரணம் என்ன? தடுப்பது எப்படி?
Embed widget