WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு விரைவில் வெளியிட இருக்கும் புதிய வசதிகள் பற்றிய விவரங்களை காணலாம்.
வாட்ஸ் அப் பீட்டா வர்ஷனில் கான்டெக்டில் உள்ளவர்கள் ’ரீசன்ட் ஆன்லைன்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் அனைத்து வாட்ஸ் அப் பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஆக்டிவாக இருந்தவர்களை காண்பிப்பதை போல வாட்ஸ் அப்பிலும் புதிய வசதி வர இருக்கிறது.
இந்த ’ரீசன்ட் ஆன்லைன்’ அம்சன் ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். பயனர்களுன் பீட்டா வர்ஷனில் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தொழில்நுட்பம் பற்றிய அப்டேட்களை வெளியிடும் WABetaInfo தெரிவித்துள்ளது.
வட்ஸ் அப் பயன்படுத்துவர்களுக்கு சிறப்பான அப்டேட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு வசதிகளையும் அம்சங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, வாட்ஸ் அப் மெசேஜ்களில் தனிநபர் பாதுகாப்பை மேம்படுத்தவும் அப்டேட்களை செய்து வருகிறது.
WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தியில் மெசேஜ் செய்வதை எளிதாக்குவதற்காக புதிய அம்சத்தை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதுவரை வாட்ஸ் அப்பில் ஒருவர் கடைசியாக எப்போது இன்பாக்ஸ் செக் செய்தார்கள் என்பதை 'Last Seen' என காட்டும். ஆனால், புதிதாக வரும் வசதியின் மூலம் கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தவர்கள் என்பதை நோட்டிவை செய்யும் என்று தெரிவித்துள்ளது. பீட்டா டெஸ்டரில் உள்ளவர்கள் சிலருக்கு ’ரீசன்ட் ஆன்லைன்’ என்ற டேப் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆன்லைன் வந்து செல்வதும் குறித்த அப்டேட் தெரியும்.
Add to Note அம்சம்
WhatsApp beta for Android 2.24.9.12 வர்ஷனில் புதிய வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான விசயங்களை ‘நோட்ஸ்’ என்பதில் குறிப்பிடலாம். இதன் மூலம் தொழில், வேலை சார்ந்த முக்கியமான நிகழ்வுகள், நினைவுப்படுத்த வேண்டியவை, முடிக்க வேண்டிய வேலைகள் ஆகியவற்றை சிறு குறிப்பாக எழுதலாம். தொழில் ரீதியிலாக அனுப்ப வேண்டிய பணம், ஃபைல் உள்ளிட்டவற்றை நோட்ஸாக எழுதுவது குறித்த மேலே உள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
சமீபத்தில் வாட்ஸ் அப் மெசேஜ்களில் இன்பாக்ஸ் முழுவதும் தேவையான மெசேஜ்கள், பைல்களை தேட புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எதாவது மெசேஜ்களை தேட வேண்டும் என்றால் இனி எளிதாக தேடலாம். நியூ பில்டர்ஸ் அம்சத்தில் All, Unread மற்றும் Group, ஃபோட்டோஸ், வீடியோ, லிங்க்ஸ், ஜிஃப், ஆடியோ, டாக்குமென்ட், Polls போன்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை வைத்து தேவையானவற்றை தேடலாம்.
ன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ஸ்டோரியில் ஒருவரை மென்ஷன் செய்வது, மூன்றிற்கும் மேற்பட்ட நபர்களின் மெசெஜ்களை பின் செய்வது உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகலாம். அதோடு, பல புதிய அப்டேட்கள் வெளியாக இருக்கிறது.