AIRTEL -ஐ தொடர்ந்து ரீச்சார்ஜ் கட்டணத்தை 25 % வரையில் உயர்த்திய வோடஃபோன் - முழு விலை விவரம் உள்ளே..
Vodafone Idea New Prepaid Tariff: "தனிநபர் மூலம் கிடைக்கு வருவாயை அதிகப்படுத்துவதன் மூலம் தொழில்துறை எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தை சமாளிக்க முடியும்"
VI New Prepaid Tarrif: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீப காலமாக தங்களது ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான கட்டண உயர்வை அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாக்களின் விலையை உயர்த்திய நிலையில் , விஐ(VI) என்னும் வோடஃபோன் ஐடியாவும் தனது ரீச்சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது குறித்த புதிய அறிவிப்பு மற்றும் பிளான் விவரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது விஐ. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் ”தற்போதைய சூழலில் Average revenue per user என்னும் தனிநபர் மூலம் கிடைக்கு வருவாயை அதிகப்படுத்துவதன் மூலம் தொழில்துறை எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தை சமாளிக்க முடியும் என்றும் இது தங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் ”தெரிவித்துள்ளது.
விஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளான்கள் 99 ரூபாயிலிருந்து தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 2,399 என மாற்றப்பட்டுள்ளது.தற்போது 79 ரூபாயில் கிடைக்கும் சேவையானது வருகிற 25 ஆம் தேதிக்கு பிறகு 99 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. 79 ரூபாய் சேவைகளில் கிடைக்கும் சேவைகள்தான் 99 ரூபாயிலும் கிடைக்கும் என்றாலும் 99 ரூபாய்க்கான டாக் டைமை பெறலாம். அதே போல 149 ரூபாயிலிருந்த ஆரம்ப வாய்ஸ் அன்லிமிட்டட் பிளான் 179 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.முன்பு அதிகபட்ச வரம்பாக இருந்த 2,399 ரூ திட்டமானது 2,899 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல 219 ரூ ஆக இருந்த வாய்ஸ் பிளான் 269 ரூபாய்க்கும், 249 ரூபாயாக இருந்த பிளான் 299 ரூபாய்க்கும், 299 ரூபாயாக இருந்த பிளான் 359 ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.399 என்ற மதிப்பில் இருந்த சந்தா , ரூ459 ஆக மாற்றப்பட்டுள்ளது.449 ஆக இருந்த பிளான் 539 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே போல ரூ.379, ரூ.599, ரூ699, ரூ1499 ஆக இருக்கும் சந்தாக்கள் தற்போது ரூ.459, ரூ.719, ரூ839, ரூ.1799 என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டேட்டா ஆட் ஆன் என அழைக்கப்படும் சிறப்பு டேட்டா பிளான்களும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 3 ஜிபி டேட்டா ரூ 48 என்ற விலையில் கிடைக்கிறது , இதன் விலை ரூ.58 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதே போல 12 ஜிபி கிடைக்கும் 98 ரூபாய் பிளானானது 118 ரூபாய் என மாற்றப்பட்டுள்ளது. 50 ஜிபி கூடுதல் டேட்டா 251 என்ற விலையில் கிடைக்கும் நிலையில் அதன் விலை 298 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இறுதியாக 100 ஜிபி கிடைக்கும் 351 ரூ டேட்டா பிளானானது 418 ஆக மாற்றப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தியிருப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளான் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.