HCL Jobs: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - ஐ.டி. ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த எச்.சி.எல். சி.இ.ஓ.
அடுத்த 12 மாதத்தில் 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் எடுக்கவுள்ளோம் என ஹச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
முன்னணி நிறுவனங்களின் பணி நீக்கம்:
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. இதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனமானது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களே, பணியாட்களை நீக்கம் செய்து வருவது ஐ.டி ஊழியர்களை பெரிதும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்றும், பணவீக்கம் ஏறபடவுள்ளதாகவும் ஐ.எம்.எஃப் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதையடுத்து, உலகம் முழுவதும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடைமுறை பெருநிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹச்.சி.எல்- பணி சேர்ப்பு:
படம்: ஹச்.சி.எல். சிஇஓ சி.விஜயக்குமார்
30 ஆயிரம் பேர்
ஹச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சி விஜயகுமார், சுவிட்சர்லாந்தின் நடைபெற்ற உலக பொருளாதார மனறத்தின் கலந்து கொண்டார். அப்போது, ஹச் சி எல் நிறுவனத்திற்கு பணியாட்களை எடுக்கும் திட்டம் குறித்து பேசினார். கடந்த 18 மாதத்தில் புதிய ஊழியர்களை நியமிப்பது 2 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டில், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களில் சுமார் 30, 000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அடுத்த ஒரு ஆண்டிலும் சுமார் 30 ஆயிரம் நியமிக்கப்படவுள்ளனர் என்று சி. விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆறுதல்:
பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், இந்தியாவில் ஐடி சேவைகளில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் ஹச் சி எல் நிறுவனம், அடுத்த ஒரு வருடத்தில் 30 ஆயிரம் பணியாட்களை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருப்பது, ஐடி துறையினருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.