Twitter Update: எலான் மஸ்க் வைத்த அடுத்த ஆப்பு! ப்ளூ டிக் இல்லனா இனி இதுவும் இல்லையாம்.. குமுறும் பயனர்கள்!
ட்விட்டர் தளத்தை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Twitter Update: ட்விட்டர் தளத்தை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது.
பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடு:
We'll soon be implementing some changes in our effort to reduce spam in Direct Messages. Unverified accounts will have daily limits on the number of DMs they can send. Subscribe today to send more messages: https://t.co/0CI4NTRw75
— Twitter Support (@TwitterSupport) July 21, 2023
இந்நிலையில், தற்போது ட்விட்டரில் புதிய கட்டுப்பாட்டை எலான் மஸ்க் விரைவில் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வெரிஃபைடு செய்யப்படாத கணக்கில் இருந்து, மற்றொரு கணக்கிற்கு அனுப்பக்கூடிய நேரடி மெசேஜ்களின் (DM) அளவை விரைவில் குறைக்க உள்ளது ட்விட்டர் நிறுவனம். இதனால் ட்விட்டர் ப்ளூ டிக் இல்லாத பயனர்கள், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தான் மெசெஜ்களை (DM) பகிரிந்துக் கொள்ள முடியும். ட்விட்டர் நிறுவனம் அதன் சந்தா சேவையான ப்ளூ டிக் பயனர்களை அதிகரிக்கவும், ஸ்பேம் (spam) மெசெஜ்கள் உள்ளிட்டவற்றை குறைப்பதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தற்போது மெசெஜ் வரம்பு பற்றி ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் மெசெஜ்களை அனுப்ப விரும்பும் பயனர்கள் ப்ளூ டிக் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வந்த கட்டுப்பாடு
வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ட்வீட்களை அணுக முடியும். வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 1000 ட்வீட்களையும், புதிய வெரிஃபைடு செய்யப்படாத கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 500 ட்வீட்களையும் அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க