மேலும் அறிய

Twitter: எலான் மஸ்கின் புதிய ஐடியா! லிங்க்ட்-இன்னுக்கு போட்டியா? வேலைவாய்ப்புகளை வாரிவழங்கப் போகும் ட்விட்டர்!

லிங்க்ட்-இன் தளத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில், புதிய வசதியை ட்விட்டர் கொண்டு வர உள்ளது.

Twitter: லிங்க்ட்-இன் தளத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில், புதிய வசதியை ட்விட்டர் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே அதில் மாற்றங்கள் என்பது குவிந்து வருகின்றன. நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து,  காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன.

அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. மேலும், பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ட்விட்டருக்கு  போட்டியாக த்ரெட்ஸ்:

இதற்கிடையில், ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை ஜூலை 6 அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த ஆப் அறிமுகப்படுத்திய நேரத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதனின் பயன்பாடுகள் தற்போது குறைந்துவிட்டது என்று கூட சொல்லாம்.  ஆனாலும், ட்விட்டரை பார்த்து காப்பி அடித்து த்ரெட்ஸ் ஆப் உருவாக்கப்பட்டதாக எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார்.  இந்நிலையில், வேலைவாய்ப்பு தளமான லிங்க்ட்-இன் தளத்திற்கு போட்டியாக புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளார் எலான் மஸ்க்.

வேலைவாய்ப்புகளை வழங்கும் ட்விட்டர்:

அதன்படி,  ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வெரிஃபைட் செய்யப்பட்ட நிறுனங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு ஒரு வசதியை கொண்டு வர உள்ளது. குறிப்பாக அந்த நிறுவனங்களின் ட்விட்டர்  பக்கத்தில் பயோ (bio) குறித்த சுயவிவரங்கள் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் அந்த நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை வேலை தேடும் பயனர்கள் தங்களுக்கு தேவையான நிறுவனங்களின் இணையதளத்திற்கு சென்று அந்தந்த நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல், ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) எனும் புதிய கணக்கை ட்விட்டர் நிறுவனம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  ட்விட்டர் ஹயரிங் (Twitter Hiring) மூலம் வெரிஃபைடு நிறுவனங்கள் 5 வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை பதிவு செய்யலாம்.  ஏற்கனவே இந்த அம்சம், மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Embed widget