மேலும் அறிய
TN Roundup: திமுகவில் ஓபிஎஸ், புதிய தலைமை நீதிபதி, தங்கம் விலை, தேர்தல் ஆலோசனை- தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
- தந்தை ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.1,19,200க்கும் கிராம் ரூ.14,900க்கும் விற்பனை
- சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே நாளை (பிப்.28) பேச்சுவார்த்தை
- தனது பிறந்தநாளில் ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
- தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில், இன்று 2வது நாளாக ஆலோசனை
- வேலூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் கூடாரம் அமைத்தே, நான் சொன்ன பிறகுதான் - அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
- “கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என கேட்கிறார் விஜய்” - அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை - மார்ச் 5ம் தேதி நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம்
- தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்.27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது
- கோவையில் இன்று (பிப்.27) மாலை திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்
- தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று (பிப்.27) மிதமான மழைக்கு வாய்ப்பு
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
























