பாத்திரம் தேய்ச்சே வாழ்க்கை போகுதா? நேரத்தை மிச்சப்படுத்தும் டிஷ்வாசர்கள்... எது வாங்கலாம்? என்ன விலை?
டிஷ்வாசர் நேரத்தையும், உழைப்பையும் மிச்சம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகச்சிறந்த டிஷ்வாசர் மாடல்களுள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
நம்மில் பலரும் கைகளால் சமையல் பாத்திரங்களை விலக்கி, கழுவிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நவீன இல்லங்கள் பலவற்றிலும் புதிதாக டிஷ்வாசர்கள் இடம்பெறத் தொடங்கிவிட்டன. சமையல் அறையில் ஃப்ரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற மற்றொரு மின்சாதனமான டிஷ்வாசர் நேரத்தையும், உழைப்பையும் மிச்சம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதனால் சமையல் பாத்திரங்கள் மிகத் தூய்மையாகவும் மாற்றப்படுகின்றன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகச்சிறந்த டிஷ்வாசர் மாடல்களுள் சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
1. Bosch SMV46KX01E
போஷ் நிறுவனத்தின் இந்த டிஷ்வாசர் 13 இடங்களுக்கான செட்டிங், இரட்டை வாஷ் செட்டிங், விரைவாக வாஷ் செய்யும் செட்டிங் முதலான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த டிஷ்வாசரில் சமையல் குக்கர் போன்ற பெரிய பாத்திரங்களை வைக்கும் அளவுக்குப் பெரிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தினசரி பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மாடல், மிகச் சிறந்த டிஷ்வாசர்களுள் ஒன்றாக இடம்பெறூகிறது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள smart rack system மூலமாக இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் விலை 58,799 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. IFB Neptune FX
சாதாரண வடிவமைப்பு கொண்டு காண்போரை ஈர்க்கும் IFB Neptune FX டிஷ்வாசர் சமையல் அறையிலும், பாத்திரம் கழுவும் இடங்களிலும் எளிதாக இடம்பிடிக்கும் தன்மை கொண்டது. மேலும், இதிலும் அதிக இடம் அளிக்கப்பட்டிருப்பதால், ஒரு முறை பயன்படுத்துபோதே பல்வேறு பெரிய அளவிலான பாத்திரங்களை இதனுள் வைக்க முடியும். இந்த மாடல் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்துவதால் அதிக மின் கட்டணத்தை நினைத்து அஞ்சத் தேவையில்லை. இதன் விலை 32,999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. Siemens SN26L801IN
தினசரி பாத்திரங்களைத் தூய்மைப்படுத்தும் பணிக்கான சிறப்பான டிஷ்வாசர்களுள் இதுவும் ஒன்று. மேலும், பார்ப்பதற்கு அழகான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இந்த டிஷ்வாசர் கடினமான கறைகளையும், எண்ணெய்க் கறைகளையும் நீக்குகிறது. மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் ஒன்றின் காரணமாக, பாத்திரங்களை மிக விரைவில் சுத்தப்படுத்தும் வசதியும் இதில் உண்டு. இதன் விலை 45,990 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. LG D1452CF
புகழ்பெற்ற எல்.ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டிஷ்வாசர் உறுதியான உலோகத்தால் செய்யப்பட்டு, கண்ணைக் கவரும் அழகான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிஷ்வாசரின் சிறப்பம்சமாக, இதன் கண்ட்ரோல் பேனல் கைக்கு எட்டும் தொலைவில் வைக்கப்பட்டிருப்பதுடன், அதிகம் குனிந்து, நிமிராமல் பயனாளர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். 5 புதிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த டிஷ்வாசர் அறிவுள்ள இயந்திரமாகக் கருதப்படுகிறது. இதன் விலை 33,999 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.