WhatsApp:இனி கவலை வேணாம்.. வாட்சப் ஸ்பேம் மெசேஜெல்லாம் தானாவே நீக்கப்படணுமா?
WhatsApp Update: வாட்ஸ் அப் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அம்சம் என்ன என்பது பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
ஸ்பேம் மெசேஜ்களை (Spam messages) ஆட்டோமேட்டிக்காக ப்ளாக் செய்யும் வசதி வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாக இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப்பில் புதிதாக அறிமுகம் செயப்பட்டு வருகிறது. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றில் உள்ளது போன்ற வசதிகளை வாட்ஸ் அப்பிலும் வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிடுள்ளதாக தெரிகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் வசதிகளை மெட்டா வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்துள்ளது. அதோடு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் இரண்டிலும் தொழில் செய்யவும், பொருட்களை விற்பனை செய்யவும் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
ஸ்பேம் மெசேஜ்:
ஒருவரின் தொடர்பு எண் இருந்தாலே அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மெசெஜ் அனுப்ப முடியும். உங்களுக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் மெசேஜ்கள் உங்கள் தொந்தரவாக இருப்பின் அதற்கு புதிய வசதியை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாக WABetaInfo- ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம் 'Unknown numbers’-லிருந்து வரும் மெசேஜ்களை ப்ளாக் செய்யும் செட்டிங்க்ஸ் வசதி வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்ட் WhatsApp beta 2.24.17.24 வர்சனில் இது கிடைக்கிறது. அதன்படி, தெரியான எண்களில் இருந்து வரும் மெசேஜ்களை ப்ளாக் செய்யும் வசதி செட்டிங்க்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை எனேபிள் செய்து வைத்தால் நீங்கள் உங்கள் கான்டக்ட் லிஸ்டில் இடம்பெறாத தொடர்பு எண்களில் இருந்து வரும் மெசேஜ், அழைப்புகளை வாட்ஸ் அப் ப்ளாக் செய்துவிடும். இதை டிஸேபிள் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
வாட்ஸ் அப் ஸ்டிக்கர்ஸ்:
வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்வது உடன் இமோஜி, ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்துவது பலரின் தேர்வாக இருக்கும். அப்படியிருக்கையில், நிறைய ஸ்டிக்கர்ஸ் வகைகளை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவானம் Giphy நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய ஸ்டிக்கர்கள், GIF அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் சில அப்டேட் வெளியாக உள்ளது. வாட்ஸ் அப் beta for iOS 24.16.10.70 வர்சனில் மெட்டா வாய்ஸ் சாட் செய்யும் வசதி இருப்பதாக WABetaInfo வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Text மற்றும் Voice Mode இரண்டில் எது வேண்டுமோ அதை பயனாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். Apple Siri, கூகுள் Gemini AI யில் நீங்கள் பேசுவதை வைத்து அது பதில் அனுப்பும். இப்போது மெட்டா AI-யிலும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Brief & Full மோட் என இரண்டு வகை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விரிவான, சுருக்கமான பதில்கள் கிடைக்கும்.