'உங்க போஸ்ட்பெய்ட் சிம் ப்ரீபெய்டா மாறணுமா?' ஒரே OTP தான் - வருகிறது புதிய முறை!

உங்கள் போஸ்ட்பெய்ட் நம்பரை அதிகம் மெனக்கெடாமல் ஒரே ஓடிபி மூலம் எளிதாக ப்ரீபெய்டாக மாற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றன. விரைவில் இந்த வசதி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

செல்போன்களின் தொடக்கக் காலத்தில் சிம் கார்டுகளே செல்போன் விலைக்கு விற்ற வரலாறும் உண்டு. பின்னர் தொலைதொடர்பு நிறுவனங்களின் அசுர வளர்ச்சியாலும், வியாபார போட்டியாலும் சிம் கார்டுகள் இலவசமாக வந்து குவிந்தன. ஒரு ஆள் பல சிம் கார்டுகளை பயன்படுத்திய கதையும் உண்டு. சிம் கார்டுகளில் இரண்டு வகை உண்டு. போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட். தேவைக்கு ஏற்ப பயன்படுத்திவிட்டு பின்னர் அதற்கான தொகையை செலுத்துவது போஸ்ட்பெய்ட். செல்போனை பேசுவதற்கு அதிகம் பயன்படுத்தியவர்கள் இந்த போஸ்ட்பெய்ட் சிம் கார்டை வைத்திருப்பார்கள்.உங்க போஸ்ட்பெய்ட் சிம் ப்ரீபெய்டா மாறணுமா?' ஒரே OTP தான் - வருகிறது புதிய முறை!

ப்ரீபெய்ட் என்பது ரீசார்ஜ் செய்து செய்து பேசிக்கொள்ளலாம். ஆனால் ஜியோவின் வருகைக்கு பின்பு சிம் கார்டு உலகில் பெரிய மாற்றமே ஏற்பட்டது. அன்லிமிடெட் கால், அன்லிமிடெட் இண்டர்நெட் என வசதிகளை அள்ளித்தூவியது ஜியோ. குறிப்பிட்ட ரீசார்ஜில் எல்லாமே அன்லிமிடெடாக கிடைத்ததால் போஸ்ட்பெய்ட்க்கான தேவை கேள்விக்குறியானது. தொகையும் ப்ரீபெய்டில் குறைவு. அதனால் போஸ்ட்பெய்ட் பயனாளர்கள் தங்கள் சிம்கார்டை ப்ரீபெய்டாக மாற்றி வருகின்றனர். ஆனால் இன்றைய தேதிக்கு பெரும் வேலையாக உள்ளது.
>>செல்போனுக்கு விளம்பரம் வந்து குவியுதா? இந்தாங்க சில டிப்ஸ்! உங்க செல்போன் இனி க்ளீன்!
அந்தக்கஷ்டத்துக்கு முடிவுகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது இந்திய தொழில்துறை செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம். வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தால் ஓடிபி மூலம் எளிதாக அவர்களின் போஸ்ட்பெய்ட் நம்பரை ப்ரீபெய்ட் நம்பராக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இது  தொடர்பான கோரிக்கையையையும் திட்டத்தையும் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம், தொலைத்தொடர்பு துறையிடம் கோரியுள்ளது. உங்க போஸ்ட்பெய்ட் சிம் ப்ரீபெய்டா மாறணுமா?' ஒரே OTP தான் - வருகிறது புதிய முறை!

வாடிக்கையாளர்களின் விவரங்களை சிம் கார்டு நிறுவனங்கள் சரியாக கையாண்டால் ஓடிபி முறை எளிது தான் என தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால்  பயனர்களின் நேரம், அலைச்சல் மிச்சமாலும். அதே எண், அதே பதிவுகள், அதே சிம் ஆனால் போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டுக்கு மாற்றிவிடலாம். புதிய சிம் தேவையில்லை என்பதால் புதிய ஆவணங்கள் சமர்ப்பிப்பது போன்ற வேலைகளும் இல்லை. இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பாதுகாப்பாக மாற்றிவிடலாம் எனவும் கூறப்படுகிறது.
>>ஹோம் தியேட்டர் வாங்க போறீங்களா? இதோடாப் 5 ஹோம் தியேட்டர் சவுண்ட் சிஸ்டம்ஸ் !
இது குறித்து தெரிவித்துள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள், ஓடிபி என்பது தற்போது அனைத்து துறைகளிலும் ஏற்றுக்கொண்ட ஒரு அங்கீகாரம் தான். பெரும்பாலான சேவைகள் ஓடிபி அங்கீகாரத்தை கொண்டு உறுதி செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் போஸ்ட்பெய்ட் -ப்ரீபெய்ட் மாற்றும் வசதியையும் அனுமதிக்க வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்கு வசதியானது, வணிக ரீதியாகவும் லாபகரமானது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டால் வெறும் 10 நிமிடத்தில் உங்கள் சிம் கார்டு போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டாக மாறும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags: postpaid prepaid prepaid sim prepaid change postpaid change

தொடர்புடைய செய்திகள்

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Surya Grahan 2021 Time: ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று; இந்தியாவில் தெரியுமா?

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Twitter vs New IT Rules: சரணடைந்தது ட்விட்டர்; ஒரு வாரம் கெடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Birthday: உலகை இயக்கும் இணையத்தின் இதயம் சுந்தர் பிச்சை!

Sundar Pichai Birthday: உலகை இயக்கும் இணையத்தின் இதயம் சுந்தர் பிச்சை!

PUBG Remake | 'சிக்கன் டின்னரை கொண்டாடலாம்' - எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் பப்ஜியின் ரீமேக்!

PUBG Remake |  'சிக்கன் டின்னரை கொண்டாடலாம்' - எதிர்பார்ப்புகளை  எகிறவைக்கும் பப்ஜியின் ரீமேக்!

டாப் நியூஸ்

Mumbai Rain: மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 11 பேர் பலி

Mumbai Rain: மும்பையில் கனமழை: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 11 பேர் பலி

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு

Kallanai Canal Rehabilitated: 87 ஆண்டுகளுக்கு பின் கல்லணை கால்வாய் சீரமைப்பு

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்; கடன் விவகாரம் காவல்துறைக்கு சென்றது!

ஆர்.பி.சௌத்ரி  மீது விஷால் புகார்; கடன் விவகாரம் காவல்துறைக்கு சென்றது!