`20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவான ஸ்மார்ட் டிவி!’ - என்ன வாங்கலாம்?
குறிப்பிட்ட பட்ஜெட் விலைகளுக்குள் சிறந்த ஸ்மார்ட் டிவிக்கள் கிடைக்கின்றன. 720p ரிசொல்யூஷனை வழங்கும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் டிவிக்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
ஸ்மார்ட் டிவி பயன்படுத்துவன் மூலம் சாதாரண டிவியைப் போல அல்லாமல், இணையத்தில் கிடைக்கும் கண்டெண்ட்களையும் பார்வையிட முடியும். எனினும் ஸ்மார்ட் டிவி வாங்குவதற்காக நீங்கள் அதிகம் பணம் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட பட்ஜெட் விலைகளுக்குள் சிறந்த ஸ்மார்ட் டிவிக்கள் கிடைக்கின்றன. 720p ரிசொல்யூஷனை வழங்கும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் டிவிக்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.
Mi 4A Pro 32-inch Smart LED HD Ready TV (விலை:16,999 ரூபாய்)
ஷாவ்மி நிறுவனத்தின் Mi 4A Pro 32 இன்ச்களைக் கொண்ட HD ஸ்மார்ட் டிவியாகும். இதில் 1336x768 ரிசொல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் refresh rate, 60Hz ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ சிஸ்டமாக 20W Dolby+ DTS-HD சேர்க்கப்பட்டுள்ளதோடு, இந்த டிவியில் மூன்று HDMI portகளும், 2 USB portகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியில் ஷாவ்மி நிறுவனம் PatchWall என்ற மென்பொருள் வழங்குவதால், பயன்பாட்டாளர்கள் டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ முதலான தளங்களை அணுக முடியும்.
Samsung 32 inch LED HD-Ready TV (விலை: 18,290 ரூபாய்)
சாம்சங் நிறுவனம் வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் ரிசொல்யூஷன், 1336x768 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, இதில் கொடுக்கப்பட்டிருக்கும் LED பேனல் மூலமாக பயன்படுத்துவோர் தங்களுக்குத் தேவையான HDR ரிசொல்யூஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதில் அளிக்கப்பட்டிருக்கும் 20W ஸ்பீக்கர்கள் Dolby Digital Plus அம்சம் கொண்டவை. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் USB port வசதியும் உண்டு.
Micromax 32 inch LED HD-Ready TV (விலை: 17,999 ரூபாய்)
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் A+ grade LED பேனல் வழங்கப்பட்டுள்ளதால்; இது 1336x768 ரிசொல்யூஷன் அளிக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 22W ஸ்பீக்கர்களும், HDMI, USB ஆகிய port வசதிகளுடன் ஸ்மார்ட்போன் மூலமாக ஸ்மார்ட் டிவியைக் கட்டுப்படுத்தும் Chromecast வசதியும் இதில் உண்டு.
Onida 32 Inch LED HD Ready Fire TV (விலை: 18,999 ரூபாய்)
ஒனிடா வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவியில் Fire TV OS, Alexa வாய்ஸ் கண்ட்ரோல் ஆகியவை பிரத்யேக அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளனர். லைவ் டிவி, display mirroring முதலான வசதிகளும் இதில் உண்டு. இந்த ஸ்மார்ட் டிவியில் மூன்று HDMI portகளும், ஒரு USB portடுடன் 20W ஸ்பீக்கர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ சிஸ்டம் Dolby Digital Plus, DTS TruSurround ஆகியவையாக வழங்கப்பட்டுள்ளன.
LG 32 Inch LED HD Ready TV (விலை: 17,999 ரூபாய்)
எல்.ஜி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவியில் 1336x768 ரிசொல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் refresh rate, 50HZ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு HDMI portகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் டிஸ்ப்ளே active HDR support அம்சம் கொண்டது. 10W output, DTS Virtual: X support அம்சங்களைக் கொண்டுள்ளது இத ஆடியோ சிஸ்டம். Web OS smart TV என்ற மென்பொருளில் இந்த ஸ்மார்ட் டிவி செயல்படுகிறது.