Samsung Galaxy M13 5G: இந்தியாவிலேயே விலைகுறைந்த 5G ஸ்மார்ட்ஃபோன்.. சாம்சங் வழங்கும் புதிய மாடல்!
தற்போது சாம்சங் நிறுவனம் அடுத்ததாக சாம்சங் கேலக்ஸி M13 5G என்ற மாடலை அறிமுகப்படுத்தும் எனவும், அது பட்ஜெட் விலையில் இருக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் Galaxy M சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது சாம்சங் நிறுவனம். தற்போது சாம்சங் நிறுவனம் அடுத்ததாக சாம்சங் கேலக்ஸி M13 5G என்ற மாடலை அறிமுகப்படுத்தும் எனவும், அது பட்ஜெட் விலையில் இருக்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் இந்தியக் கிளை சார்பில் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், சாம்சங் நிறுவனம் அதன் புதிய Galaxy M சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களுள் ஒன்றை வரும் ஜூலை 5 அன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடும் என அறிவித்துள்ளது. இந்தப் புதிய ஸ்மார்ட்ஃபோன் பற்றிய விவரங்கள் எதையும் சாம்சங் நிறுவனம் வெளியிடாத நிலையில், இது சாம்சங் கேலக்ஸி M13 5G என்ற மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் சாம்சங் நிறுவனம் Galaxy M13 மாடலை 4G வெர்ஷனாக வெளியிட்டிருந்தது. தற்போது புதிதாக Galaxy M13 5G வெளியிடப்பட்டு, இந்தியாவிலேயே விலைகுறைந்த 5G மாடலாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, சாம்சங் கேலக்ஸி M13 5G ஸ்மார்ட்ஃபோனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ப்ளூ, ப்ரவுன், க்ரீன் ஆகிய நிறங்களிலும் இது வெளியாகும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.
Get ready to laugh till you drop and... Shop! Tune in to Samsung live on 5th July, 12pm to know more. #UpForItAll #Samsung pic.twitter.com/leIvBswr5O
— Samsung India (@SamsungIndia) June 28, 2022
சாம்சங் கேலக்ஸி M13 5G மாடலில் MediaTek Dimensity 700 SoC பொருத்தப்பட்டு, அதில் 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறவுள்ளது. மேலும், 6.5 இன்ச் அளவிலான FHD+ IPS LCD பேனல் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 5000 mAh பேட்டரியும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டும் சேர்க்கப்பட்டுள்ள இந்த மாடலின் பின்புறத்தில் 50MP, 2MP கேமராக்களும், முன்புறத்தில் 5MP செல்ஃபீ கேமராவும் இடம்பெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்