Samsung Galaxy A03 | பட்ஜெட் விலையில் மொபைல்போன் ! அசத்தும் samsung நிறுவனம்!
உயர்தர பயனாளர்களை மட்டுமே குறிவைத்து மொபைல்களை களமிறக்கிய சாமசங் தற்பொது பட்ஜெட் பயனாளர்களை குறிவைத்து மொபைல்போனை சந்தைப்படுத்தியிருப்பது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
பிரபல மொபைல் நிறுவனமான சாம்சங் தற்போது பட்ஜெட் விலையிலான மொபைல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.Samsung Galaxy A03 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய மொபைல்போனானது கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. முன்னனி ஆன்லைன் நிறுவனங்கள் , சாம்சங்.காம், ரீடெய்ல் ஸ்டோர்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த மொபைல்போனை பெற்றுக்கொள்ள முடியும் .
வசதிகள் :
இரண்டு சிம்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள .Samsung Galaxy A03 மொபைலானது ஆண்ட்ராய்ச் 11 go இயங்குதளத்தை கொண்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளீட்டு நினைவக திறனை கொண்டுள்ளது. மெமரிகாடை கொண்டு கூடுதல் நினைவகத்தை நீட்டித்துக்கொள்ளலாம். திரையை பொறுத்தவரையில் 6.5 இன்ச் டிஸ்பிளே வசதி , 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 720x1,600 pixels ரெசொலியூசன் வசதியுடன் கிடைக்கிறது. UNISOC SC9863A ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரையில் 8-megapixel முன்பக்க கேமாரா f/2.0 aperture லென்ஸுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 4 மடங்கு digital zoom செய்துக்கொள்ளும் வசதியும் கிடைக்கிறது. selfies மற்றும் வீடியோ கால் செய்வதற்கு 5-megapixel கேமராவுடன் f/2.2 aperture லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 4G LTE கணக்டிவிட்டி. 2.4GHz உடன் கூடியWi-Fi 802.11 கணக்டிவிட்டி ,Wi-Fi Direct, Bluetooth v4.2, a 3.5mm அளவிலான headphone போர்ட் மற்றும் GPS உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.light sensor மற்றும் proximity சென்சார் என இருவகையான சென்சார்களை கொண்டு Samsung Galaxy A03 உருவாக்கப்பட்டுள்ளது.a 5,000mAh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டிருப்பது பிளஸாக பார்க்கப்படுகிறது.
Introducing the new #GalaxyA03Core. Discover all that you love with an expansive HD+ Infinity-V display, a 5000mAh battery and a powerful Octa-core processor. With all this and more, time to meet the newest Galaxy.
— Samsung India (@SamsungIndia) December 8, 2021
Learn more: https://t.co/B68lRHlCCo #Samsung pic.twitter.com/cuTleHm8Ob
விலை :
விலையை பொருத்தவரையில் 7,999 என்ற பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இது 2GB RAM + 32GB என்ற அடிப்படை வசதிகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோல்டபுள் மொபைல்ஸ் போல உயர்தர பயனாளர்களை மட்டுமே குறிவைத்து மொபைல்களை களமிறக்கிய சாமசங் தற்பொது பட்ஜெட் பயனாளர்களை குறிவைத்து மொபைல்போனை சந்தைப்படுத்தியிருப்பது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
Is it holiday magic? Or love at first sight?
— Samsung India (@SamsungIndia) December 1, 2021
We don’t know, but this year, all #GalaxyZFlip3 5G wants for the holidays, is you. Buy now and avail ₹ 7000 cashback or upgrade bonus*.
Learn more: https://t.co/nzzDZ2KJ7M#Samsung pic.twitter.com/iyIpras7dy