பட்ஜெட் விலை.. ஆச்சரியப்பட வைக்கும் சிறப்பம்சங்கள்.. ரியல்மியில் புது மாடல் போன் விவரங்கள்!
ரியல்மி நிறுவனத்தின் அடுத்த புதிய மாடலான ரியல்மி C21Y என்ற மொபைல் போன் இன்று முதல் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
ரியல்மி C21Y சீரிஸ் மொபைல் போன் இந்தியாவில் இன்று முதல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் விற்கப்பட உள்ளது. அதன்படி இந்த மொபைல் போனில் சில முக்கியமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை என்னென்ன? இந்த மொபைல் போனின் விலை என்ன தெரியுமா?
ரியல்மி C21Y சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரியல்மீ C21Y மொபைல் போனில் பின்னால் 3 கேமரா அமைந்துள்ளது. அதில் ஒரு கேமரா 13 மெகா பிக்சலும், மற்றொன்று இரண்டு மோனோக்ரோம் மெகாபிக்சலும், 2 மெகா பிக்சல் மேக்ரோ ஷூட்டராக உள்ளது. இவற்றுடன் சேர்ந்து முன்பகுதி கேமரா 5 மெகாபிக்சல் மற்றும் எஃப் 2.4 லென்ஸ் உடன் அமைந்துள்ளது. இந்த மொபைல் போனின் டிஸ்ப்ளே 6.5 இன்ச் அளவில் இருக்கிறது. மேலும் இதில் ஸ்லோ மோஷன் வீடியோ ஹெச்டி ரெக்கார்டிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்டாகோர் பிராசஸர் உடன் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் ஆகிய இருவகையில் இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் ஸ்டோரேஜ் 64 ஜிபியாக இருக்கிறது. இதை நாம் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை அதிகரித்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மொபைல் போனில் இரண்டு நானோ சிம் போடும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனால் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. மேலும் மொபைல் போனின் பின்னால் கைரேகை சென்சார் அமைந்துள்ளது.
ரியல்மி C21Y மொபைல் போனின் விலை என்ன?
ரியல்மி C21Y மொபைல் போன் 3ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வகையில் வருகிறது. இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட மொபைல்க் போன் 8,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மொபைல் போன் முதலில் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு 4ஜிபி ரேம் போன் 12 ஆயிரத்திற்கும், 3 ஜிபி போன் 10 ஆயிரத்திற்கும் விற்கப்பட்டது. அந்த விலை இந்தியாவில் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மீ C21 Y போனை ஃபிளிப்கார்ட்,அமேசான், ரியல்மீ வலைதளம் மற்றும் குறிப்பிட்ட சில ஸ்டோர்களில் மட்டும் தற்போது வாங்க முடியும்.
இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் வருவதால் இந்த மொபைல் போனிற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி C21Y மொபைல் போன் நோக்கியா ஜி20,ரெட்மீ 9 ஆகிய போன்களுடம் போட்டி போட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 'நாள் ஒன்றுக்கு 3GB' - ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டேட்டா பிளான்கள்!