'நாள் ஒன்றுக்கு 3GB' - ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டேட்டா பிளான்கள்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் ஜியோ வெளியிட்டிருக்கும் 3GB திட்டங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை இப்போது காணலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் ஒரு தொகையைக் கட்டினால், அதிலேயே குறிப்பிட்ட அளவிற்கான டேட்டா சலுகை, இலவசமாக போன் பேசும் வசதி மற்றும் இலவச எஸ்.எம்.எஸ் முதலானவை வழங்கப்படுகிறது. ப்ரீபெய்ட் ஜியோ சிம் வைத்திருப்பவர்கள், வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களாகவும், அதிகமான ஸ்ட்ரீமிங் தளங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருப்பின், அவர்களுக்கு ஜியோ வழங்கும் புதிய 3GB திட்டங்கள் கைகொடுக்கும்.
ஜியோ வெளியிட்டிருக்கும் 3GB திட்டங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை இப்போது காணலாம்.
ஜியோ ரூ.349 ரீசார்ஜ் சலுகை
3GB சலுகையை மிகக் குறைந்த காலகட்டத்திற்கு மட்டும் பயன்படுத்த விரும்புவோருக்கு ஏற்ற திட்டம் இது. 28 நாள்கள் வேலிடிட்டி உடைய இந்தப் பேக்கில், 84GB டேட்டா, அதாவது நாள் ஒன்றுக்கு 3GB என்ற கணக்கில் அளிக்கப்படுகிறது. மேலும், இலவசமாக நாடு முழுவதும் எந்த நெட்வோர்க் தொடர்புக்கும் கால் செய்யும் வசதி மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் இதில் ஜியோ வழங்கும் லைவ் டிவி, மியூசிக் ஸ்ட்ரீமிங் முதலான சலுகைகளும் கிடைக்கின்றன.
ஜியோ ரூ.401 ரீசார்ஜ் சலுகை
இந்த ரீசார்ஜை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் VIP பயன்படுத்தும் இலவச சலுகை கிடைக்கிறது. இதன் மதிப்பு மட்டுமே 399 ரூபாய். மேலும், இதில் ஒவ்வொரு நாளும் 3GB டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஜியோ ஆப்களைப் பயன்படுத்தும் வசதியும் இந்தச் சலுகையின் மூலம் கிடைக்கிறது. 28 நாள்கள் வரை இந்தச் சலுகை வேலிடிட்டி அளித்தாலும், இதில் கிடைக்கும் ஹாட்ஸ்டார் VIP அக்கவுண்டை ஒரு ஆண்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ ரூ.999 ரீசார்ஜ் சலுகை
84 நாள்கள் வேலிடிட்டி அளிக்கும் இந்த திட்டமும், ஜியோ ரூ.349 திட்டமும் ஏறத்தாழ ஒரே சலுகைகளை வழங்குபவை. இதில் அதிகரிக்கப்பட்டிருக்கும் நாள்கள் மட்டுமே, அதனை முந்தைய 349 ரூபாய் திட்டத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஜியோ ரூ.3499 ரீசார்ஜ் சலுகை
ஜியோ வழங்கும் நீண்ட காலத்திற்கான 3GB டேட்டா சலுகையை அளிக்கும் திட்டம் இது. இந்தத் திட்டம் 365 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்டது. மற்ற டேட்டா திட்டங்களில் வழங்கப்படும் அதே சலுகைகள், இதில் பொதுவாக வழங்கப்படுகின்றன. மேலும் இதில் ஜியோ டிவி, JioSaavn மற்றும் ஜியோ வழங்கும் மற்ற செயலிகளையும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ வழங்கும் இந்த 3GB சலுகைத் திட்டங்கள் இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. MyJio, Paytm, Google Pay முதலான ரீசார்ஜ் செயலிகளைப் பயன்படுத்தி, ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜை செய்துகொள்ளலாம்.