Rajini++: நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ‘புதிய’ மொழி... ரசிகரின் அட்டகாச சம்பவம்...! சிறப்பம்சம் என்ன?
தமிழ் திரைப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு நிரலாக்க மொழி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கணினி உலகில் பல நிரலாக்க மொழிகள்(Programming language) உள்ளன. அவற்றில் தற்போது மிகவும் ட்ரெண்டிங்காகவும் பலரையும் கவர்ந்து உள்ள மொழிகளில் ஒன்று பைத்தான்(Python). பைத்தான் நிரலாக்க மொழியை வைத்து ஒருவர் ரஜினி ++ என்ற புதிய நிரலாக்க மொழியை உருவாக்கியுள்ளார். அந்த மொழி என்ன? அதிலுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ரஜினி++ மொழி என்றால் என்ன?
ரஜினி++ மொழி என்பது பைத்தான் மொழியை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழி(Programming language). இது ஒரு ஈசோடெரிக் நிரலாக்க மொழி(esoteric programming language). அதாவது இந்த நிரலாக்க மொழியை கொண்டு மென்பொருட்களை தயாரிக்க முடியாது. இது பெரும்பாலம் ஏற்கெனவே இருக்கும் ஒரு நிரலாக்க மொழியை வைத்து உருவாக்கப்படும் மொழி. இந்த ரஜினி ++ மொழியில் பயன்படுத்தப்படும் command மற்றும் Syntax ஆகிய அனைத்தும் பிரபலமான ரஜினிகாந்த் வசனங்கள் கொண்டு உள்ளது. உதாரணத்திற்கு இந்த மொழியில்
LAKSHMI START
DOT "Hello, World!";
MAGIZHCHI
என்று ஒரு புரோகிராம் எழுதலாம். இதில் லக்ஷ்மி ஸ்டார்ட், மகிழ்ச்சி ஆகிய ரஜினிகாந்தின் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மொழியில் எழுதப்படும் புரோகிராம்களை ரஜினிபிபி பேக்கேஜ் மூலம் செயல்படுத்த முடியும். இந்த புரோகிராமில் சில கூட்டல், கழித்தல் போன்ற கணித செயல்கள் மற்றும் இஃப் எல்ஸ்(If else) போன்ற நிபந்தனை செயல்பாடுகள் ஆகியவற்றை செயல்படுத்த முடியும்.
https://t.co/eA9kStviwU
— Aadhithya Sankar (@asankar96) May 17, 2022
Presenting rajini++, a programming language based on iconic #SuperstarRajinikanth @rajinikanth dialogues! #rajiniPlusPlus
(1)
இந்த முழு நிரலாக்க மொழியும் ஒரு பேக்கேஜ் போல் பைத்தான்(Python) நிரலாக்க மொழியில் அமைக்கப்பட்டுள்ளது. அர்ணால்ட்சி என்ற ஒரு ஈசோடெரிக் நிரலாக்க மொழியை(esoteric programming language) பார்த்த பிறகு ஆதித்யா சங்கர் என்பவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் ஒரு நிரலாக்க மொழியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதன்காரணமாக இந்த நிரலாக்க மொழியை அவர் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஜினி ++ நிரலாக்க மொழி ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது விளையாட்டாக ஒருவர் செய்த நிரலாக்க மொழி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்