Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!
ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது புதிய நார்டு சி.ஈ 5ஜி ஸ்மார்ட் போனை இன்று (16.6.2021) மதியம் வெளியிடவுள்ளது.
அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு ஏற்கனவே ஒன்பிளஸ் 9 ப்ரோ என்ற மாடலை அந்நிறுவனம் வெளியிட்ட நிலையில் மேலும் 2 புதிய போன்களை விரைவில் வெளியிடவுள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2 மற்றும் நார்டு N200 5G ஆகிய இரண்டு புதிய மாடல்களும் ஜூலை அல்லது அதற்கு அடுத்து வரும் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
This one ain't no 'Minimum Guy'. Thanks to our community for making us achieve this milestone. See you again tomorrow at the open sales: https://t.co/z1M1o0Jxk7 pic.twitter.com/qXPcf7FnNG
— OnePlus India (@OnePlus_IN) June 15, 2021
Oneplus Nord CE 5G
ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது அதிரடியான Oneplus Nord CE 5G மாடலை இந்த மாதம் வெளியிடுவதாக அறிவித்தது. ஆனால் இந்த போனின் ஸ்பெசிபிகேஷன் குறித்து எந்த தகவலும் அப்போது வெளியிடவில்லை. சீன நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Oneplus Nord CE 5G என்ற இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). அமோலெட் 6.43இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 மற்றும் ஆக்ஜென் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு Qualcomm SM7225 Snapdragon 750G 5G சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 6 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு மாடல்களில் வெளியாகவுள்ளது. 64 எம்.பி மெயின் கேமரா மற்றும் 16 எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை 22999 இருக்கலாம் என்ற யுகங்களும் இணையத்தில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tomorrow the OnePlus Nord CE 5G goes on sale. So be ready.
— OnePlus India (@OnePlus_IN) June 15, 2021
Who knows, it might just go a little faster than you’d expect.
Hit Notify me right now for more updates - https://t.co/UMDC0LqdHk pic.twitter.com/CbBBgqUhXR
Twitter | 'என்னதான் சொல்றீங்க?' நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!
இந்திய சந்தையில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் வெளியீடு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சியோமி, ஒன்பிளஸ் மற்றும் infinix ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 10 என்ற மாடல் அந்த நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாடல் போனில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி85 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மாடல்களில் வெளியாகவுள்ளது. 48 எம்.பி மெயின் கேமரா மற்றும் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.