Airtel அதிர்ச்சி! ரூ.189 ரீசார்ஜ் பிளான் நீக்கம்: குறைந்த விலையில் ரீசார்ஜ் இனி இல்லை? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஏர்டெல் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த மிகக் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றான ரூ.189 பிளானை தற்போது நிறுத்தி உள்ளது.

Airtel ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில், குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டத்தை (Recharge Plan) நிறுத்தி, மறைமுகமாக விலையை உயர்த்தி உள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: ரூ.189 ரீசார்ஜ் பிளான் நீக்கம், விலை உயர்வு!
Airtel ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில், குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டத்தை (Recharge Plan) நிறுத்தி, மறைமுகமாக விலையை உயர்த்தி உள்ளது.
குறைந்த விலை பிளான் நீக்கம்
ஏர்டெல் நிறுவனம் இதுவரை வழங்கி வந்த மிகக் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றான ரூ.189 பிளானை தற்போது நிறுத்தி உள்ளது. இந்தத் திட்டம் சாதாரண வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது.
பழைய ரூ.189 பிளானின் விவரங்கள்:
- விலை: ரூ.189
- வேலிடிட்டி (Validity): 21 நாட்கள்
- டேட்டா (Data): 1 GB
- அழைப்புகள் (Calls): அன்லிமிடெட் வாய்ஸ் கால்
- எஸ்.எம்.எஸ் (SMS): 300 எஸ்.எம்.எஸ்
புதிய கட்டாயம்: ரூ.199 பிளானுக்கு மாறுதல்
ஏர்டெல், தனது அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் பிற தளங்களில் இருந்து ரூ.189 பிளானை நீக்கி விட்டதால், இனிமேல் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், தற்போதுள்ள ரூ.199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, வாடிக்கையாளர்கள் இப்போது ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும்.
புதிய ரூ.199 பிளானின் விவரங்கள்:
- விலை: ரூ.199
- வேலிடிட்டி (Validity): 28 நாட்கள் (முந்தைய பிளானை விட 7 நாட்கள் அதிகம்)
- டேட்டா (Data): 2 GB (தினசரி டேட்டா இல்லை, மொத்த டேட்டா)
- அழைப்புகள் (Calls): அன்லிமிடெட் வாய்ஸ் கால்
- எஸ்.எம்.எஸ் (SMS): தினசரி 100 எஸ்.எம்.எஸ்
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி
ஏர்டெல் நிறுவனம் இவ்வாறு மலிவான திட்டங்களை நீக்கிவிட்டு, விலை உயர்ந்த திட்டங்களை மட்டும் வைத்திருப்பது சாதாரண வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விலையுடன், அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டா கிடைத்தாலும், குறைந்த பயன்பாடு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த ரூ.10 விலை உயர்வு ஒரு சுமையாகவே பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் செய்தது போலவே, மற்ற நிறுவனங்களும் சமீபத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளன...
ஜியோ (Jio) திட்ட மாற்றங்கள்:
ஜியோ நிறுவனம் அதன் குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ. 249-லிருந்து ரூ. 299-ஆக உயர்த்தி உள்ளது. தினசரி 1GB டேட்டா வழங்கும் ரூ. 209 (22 நாட்கள் வேலிடிட்டி) மற்றும் ரூ. 249 (28 நாட்கள் வேலிடிட்டி) திட்டங்களை ஜியோ நிறுத்திவிட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் இப்போது தினசரி 1.5GB அல்லது 2GB டேட்டா வழங்கும் விலை உயர்ந்த திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ரூ. 299 ரீசார்ஜ் செய்தால், தினமும் 1.5 GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இருப்பினும், அழைப்புகளுக்காக மட்டும் வழங்கப்படும் ரூ. 189 (மொத்தம் 2 GB டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்.எம்.எஸ்கள்) போன்ற சில திட்டங்களை ஜியோ தொடர்ந்து வழங்கி வருகிறது.
பி.எஸ்.என்.எல் (BSNL) திட்டங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் ரூ. 485 விலையில் 72 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள், 2 GB தினசரி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்கள் போன்ற சலுகைகளை வழங்கும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.





















