’’இப்போது நிலைமை சரியில்லை’’ - Mi 11 Ultra மாடல் விற்பனையை தள்ளிப்போட்ட சியோமி!
கொரோனா காலம் என்பதாலும், ஊரடங்கு காரணமாகவும் சியோமி அல்ட்ரா போன் மாடல் விற்பனை தாமதப்படுவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது
Mi 11 Ultra மாடல் போன் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Mi 11X and Mi 11X Pro என்ற இரு மாடல்களாக அறிமுகமான அல்ட்ரா மாடலுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். விரைவில் விற்பனை தேதி வெளியிடப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. தேதி வெளியிட்டதும் போனை வாங்கிவிட வேண்டும் என சியோமி ரசிகர்கள் பலர் காத்துக்கிடந்தனர். ஆனால் எந்த அறிவிப்புமே வரவில்லை. கொரோனாவில் இரண்டாம் அலை குறுக்கே வர அல்ட்ரா மாடல் விற்பனையை தள்ளிவைத்துள்ளது சியோமி. நிலைமை சீராகட்டும் என தெரிவித்துள்ளது சியோமி.
இது குறித்து ட்வீட் செய்துள்ள சியொமி,பலர் இந்த அல்ட்ரா மாடல் போனை வாங்குவதற்காக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருப்பது எங்களுக்கு புரிகிறது.ஆனால் இன்றைய நிலைமை நம் கைமீறி சென்றுகொண்டிருப்பதால் Mi 11 Ultra விற்பனை தாமதப்படுகிறது. இந்த நிலைமை கொஞ்சம் சீராகட்டும், இந்திய சந்தையில் Mi 11 Ultra விற்பனை செய்யப்படும் நாளை அதிகாரபூர்வமாக அறிவிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளது.
>> Redmi note 10 Pro 5G | இந்திய சந்தையில் போக்கோ பெயரில் வருகிறது எம்.ஐ போன்!
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் சியோமி சிக்கலை சந்தித்துள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் தான் கொரோனா காலம் சீராகும் வரை சியோமி காத்திருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
We know that you've been waiting eagerly to know more about the sale date of Mi 11 Ultra, but before we could respond to all your queries we wanted to be certain about a few things at our end.
— Mi India (@XiaomiIndia) June 2, 2021
Here is an update on the Mi 11 Ultra. Read the letter to know more.#Mi11Ultra pic.twitter.com/flUNfK4qOo
மார்ச்சில் அசத்தல் மாடலாக MI 11 ULTRAவை அறிமுகம் செய்தது சியோமி, 6.8 இஞ்ச் டிஸ்பிளே, டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட், 12 ஜிபி ரேம், 256 இண்டர்நல் ஸ்டோரேஜ், 20MP செல்ஃபி கேமரா, 50MP+40MP+40MP என்ற அசத்தலான 3 பின்பக்க கேமராக்கள், 5,000 mAh பேட்டரி கெபாசிட்டி, ஒன்றரை மீட்டர் வரை ஆழமான நீரில் விழுந்தால் 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும் கெபாசிட்டி என வேற லெவலில் சிறப்பம்சங்களை கொடுத்திருந்தது சியோமி.
இந்த செல்போனில் சார்ஜரை பொருத்தவரை 55w சார்ஜர் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் MI 11 ULTRA மாடல் 67W சார்ஜிங் கெபாசிட்டி கொண்டது என அறிவிக்கப்பட்டது. தேவையென்றால் 67W சார்ஜரை தனியாகவும் வாங்கிக்கொள்ளலாம் என சியோமி அறிவித்தது. தற்போது செல்போனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் 55w சார்ஜரில் செல்போன் முழுவதும் சார்ஜ் ஆக ஒரு மணி ஆகும். அதுவே அப்டேட் சார்ஜரான 67Wல் செல்போன் முழுவதும் சார்ஜாக 36 நிமிடங்கள் தான் எடுக்கும்.
சிறப்பம்சங்களுக்கு ஏற்ப விலையும் பிரம்மிக்க வைத்தது. இந்திய சந்தையில் ரூ.69,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
BMW X7 Special Edition | இந்திய சந்தையில் ப்ரீமியம் காரை வெளியிடும் BMW - விலை என்ன தெரியுமா?