(Source: ECI/ABP News/ABP Majha)
Netflix | ஐபோன் பயனாளர்களுக்குத்தான் இந்த சிக்கல்! Netflix சொன்ன புதுப்பிரச்னை!
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தும் செயலிகளுக்கான சில கட்டுப்பாடுகளை விதித்தது.
உலகம் முழுவது அதிக பயனாளர்களை கொண்ட ஓடிடி தளம் நெட்ஃபிளிக்ஸ். வெப் தொடர், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான கார்டூன் மற்றும் அறிவு சார்ந்த தொடர்கள் என பல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கேமிங் துறையிலும் கால்பதித்தது. மொபைல் கேம்ஸை அறிமுகப்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஆண்ட்ராய் மொபைல் போன்களுக்கான முதற்கட்ட பதிப்பை வெளியிட்டிருந்தது. முதலில் Stranger Things: 1984, Stranger Things 3,Shooting Hoops,joker Card Blast,Teeter Up உள்ளிட்ட ஐந்து வகையான மொபைல் வீடியோ கேம்ஸை அறிமுகப்படுத்தியிருந்தது.
🎮📱 Let the Games Begin📱🎮
— Netflix Geeked (@NetflixGeeked) November 2, 2021
Tomorrow, Netflix Games will start rolling out on the Netflix mobile app. First on Android, with iOS on the way.
It’s early days, but we’re excited to start bringing you exclusive games, with no ads, no additional fees and no in-app purchases. pic.twitter.com/ofNGF4b8At
Here are the five games available to download and play, with a whole lot more coming!
— Netflix Geeked (@NetflixGeeked) November 2, 2021
🕹Stranger Things: 1984
🎮Stranger Things 3
🏀 Shooting Hoops
🃏 Card Blast
🎱 Teeter Up
முதலில் ஆண்ட்ராய்ட் மொபைல்போன்களுக்கு மட்டும் அறிமுகமான நிலையில் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு விரைவில் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் ஐபோன் பயனாளர்கள் உள்ளதால் , இதனை விரைந்து அறிமுகப்படுத்த வேண்டிய நிலைக்கு நெட்ஃபிளிக்ஸ் கேமிங் தள்ளப்பட்டுள்ளது . நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நேரடியாக கேமிங்கை டவுண்லோட் செய்வதாக இருக்க வேண்டும் என்பதற்காக கிளவுட் முறையை பயன்படுத்தி தங்கள் கேமை அறிமுகப்படுத்துவது ஆண்ட்ராய்ட் மொபைலில் சாத்தியமாகும் ஆனால் ஐபோனுக்கு கூடுதல் சவாலாகும் . ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தும் செயலிகளுக்கான சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் Third party மூலம் இயங்கும் செயலிகளை ஆப்பிள் அனுமதிக்காது என குறிப்பிட்டிருந்தது.
Here’s how you can access Netflix Games:
— Netflix Geeked (@NetflixGeeked) November 2, 2021
✅ Login to the Netflix app
✅ Access Netflix Games from the homepage or the games tab
✅ Select the game you want to to play
✅ Download the game via your device’s app store
✅ Play the game through the Netflix app pic.twitter.com/7tYtZuD10A
கிளவுட் பயன்பாட்டின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் இயங்க தொடங்கினால் ஐஓஸ் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். முன்னதாக Xbox Cloud Gaming, Nvidia GeForce Now மற்றும் Google Stadia போன்றவை ஆப் ஸ்ட்ரோரில் இவ்வகை சிக்கலை எதிர்க்கொண்டன. நெட்ஃபிளிக்ஸ் தங்களது கேமிங்கை ஐபோனில் அறிமுகப்படுத்த வேண்டுமானால் ஒன்று ஆப்பிள் அதன் விதிகளை மாற்ற வேண்டும் அல்லது Netflix க்கு விலக்கு அளிக்க வேண்டும் . அப்படி இல்லையென்றால் ஆப்பிள் கொள்கைக்கு உட்பட்டு நெட்ஃபிளிக்ஸ் தங்களது கேமை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த சூழலிலும் தொடர்ச்சியாக ஐஓஎஸ்-இல் விரைவில் தங்களின் மொபைல் கேம் அறிமுகமாகும் என்கிறது நெட்ஃபிளிக்ஸ் அப்படி விரைவில் அறிமுகமானாலும் அது ஆண்ட்ராய்ட் பதிப்பை விட வேறுபட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.