மேலும் அறிய

Netflix Subscription Plan: போச்சா! மீண்டும் சந்தா கட்டணத்தை உயர்த்திய நெட்பிளிக்ஸ்... இந்தியாவுல எவ்ளோ?

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Netflix Subscription Plan: இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நெட்ஃபிளிக்ஸ்:

கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுற வளர்ச்சி அடைந்தன. அதில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்தவகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  இந்த செயலியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.  ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனர்கள் படங்கள், சீரிஸ்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் சந்தா தொகையை உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சந்தா கட்டணம் உயர்வு:

அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சில் நெட்பிளிக்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு  மூன்றாவது முறையாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சில் உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி,  நெட்பிளிக்ஸின் அடிப்படைத் திட்டத்தின் விலையை மாதத்திற்கு டாலருக்கு 9.99-லிருந்து 11.99 ஆகவும், அதன் பிரீமியம் திட்டத்தின் விலையை டாலருக்கு 19.99-லிருந்து 22.99 ஆகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பவுண்டுக்கு 7.99-லிருந்து 17.99 ஆக உயர்த்தியுள்ளது. பிரான்ஸில் யூரோக்கு 10.99-லிருந்து 19.99 ஆக உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இந்த விலை உயர்வானது இந்தியாவில் அமலாகுமா என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. தற்போது நிலவரப்படி,  இந்த விலை உயர்வானது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவில் தான் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது வணிகத்தை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளது.  அதுமட்டுமின்றி, டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் கேம்களில் அதிக முதலீடு செய்ய உள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தெரிகிறது.  

இந்தியாவிலும் கட்டணம் உயர்வா?

கட்டணம் குறைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.  இந்த பட்டியலில் 3 நாடுகளில் புதிய சந்தா திட்டங்களையும் நெட்ஃபிளிக்ஸ்  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த பட்டியலில் துரதிருஷ்டவசமாக இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை.  தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் அடிப்படை சந்தா திட்டத்திற்கு ரூ.149 வசூலிக்கப்படுகிறது.

புதிய நடைமுறை:

சமீபத்தில் வந்த அறிவிப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஸ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் கூறுகையில், ”நெட்ஃபிளிக்ஸ் கணக்கை ஒரு குடும்பம் மட்டும் பயன்படுத்துவதற்குரியது. ஒரு வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் ஒரு நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம். அதாவது, வீட்டில், பயணத்தில், விடுமுறையில் எங்கிருந்தாலும் பயன்படுத்தலாம்" என்று நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க

Whatsapp Feature: அடுத்த அப்டேட்: சாட்களுக்கு ’சீக்ரெட் கோட்'... வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய வசதி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Discount: ஐபோன் 17 ப்ரோ வாங்க பிளான் இருக்கா.? டக்குனு முடிங்க; சம்மர் சேல்ல போட்டி போட்டு தள்ளுபடி; விவரம்
ஐபோன் 17 ப்ரோ வாங்க பிளான் இருக்கா.? டக்குனு முடிங்க; சம்மர் சேல்ல போட்டி போட்டு தள்ளுபடி; விவரம்
Wireless Charging: வயர்லெஸ் சார்ஜிங்.. போன் பேட்டரிக்கு பாதுகாப்பானதா? தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Wireless Charging: வயர்லெஸ் சார்ஜிங்.. போன் பேட்டரிக்கு பாதுகாப்பானதா? தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
iPhone 17 Pro Discount Offer: ஆஹா.. ரூ.10,000 தள்ளுபடி; ஐபோன் 17 ப்ரோ யாருக்கெல்லாம் பிடிக்கும்.? இந்த வாய்ப்ப விடாம வாங்கிடுங்க.!
ஆஹா.. ரூ.10,000 தள்ளுபடி; ஐபோன் 17 ப்ரோ யாருக்கெல்லாம் பிடிக்கும்.? இந்த வாய்ப்ப விடாம வாங்கிடுங்க.!
Whatsapp Mobile Recharge: இனி ஜிபே, போன் பே வேண்டாம்.. வாட்ஸ்அப் மூலம் ரீசார்ஜ்.. வந்தாச்சு புது வசதி!
Whatsapp Mobile Recharge: இனி ஜிபே, போன் பே வேண்டாம்.. வாட்ஸ்அப் மூலம் ரீசார்ஜ்.. வந்தாச்சு புது வசதி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
US Iran War Pakistan: பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
பாகிஸ்தான் பார்த்த டகால்டி வேலை; அதனாலதான் அமெரிக்கா உங்கள நம்பல.! நடந்தது என்ன.?
Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
‘காத்திருப்போர் பட்டியலில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்’ பின்னணி என்ன?
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
கோடை விடுமுறை ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு - எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் இயக்கம்? முழு விவரம் உள்ளே
Embed widget