Netflix Subscription Plan: போச்சா! மீண்டும் சந்தா கட்டணத்தை உயர்த்திய நெட்பிளிக்ஸ்... இந்தியாவுல எவ்ளோ?
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Netflix Subscription Plan: இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெட்ஃபிளிக்ஸ்:
கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுற வளர்ச்சி அடைந்தன. அதில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்தவகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த செயலியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என சந்தா செலுத்தி கோடிக்கணக்கான பயனர்கள் படங்கள், சீரிஸ்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் சந்தா தொகையை உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சந்தா கட்டணம் உயர்வு:
அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சில் நெட்பிளிக்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மூன்றாவது முறையாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நெட்பிளிக்ஸின் அடிப்படைத் திட்டத்தின் விலையை மாதத்திற்கு டாலருக்கு 9.99-லிருந்து 11.99 ஆகவும், அதன் பிரீமியம் திட்டத்தின் விலையை டாலருக்கு 19.99-லிருந்து 22.99 ஆகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பவுண்டுக்கு 7.99-லிருந்து 17.99 ஆக உயர்த்தியுள்ளது. பிரான்ஸில் யூரோக்கு 10.99-லிருந்து 19.99 ஆக உயர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த விலை உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விலை உயர்வானது இந்தியாவில் அமலாகுமா என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. தற்போது நிலவரப்படி, இந்த விலை உயர்வானது இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்காவில் தான் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது வணிகத்தை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் கேம்களில் அதிக முதலீடு செய்ய உள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவிலும் கட்டணம் உயர்வா?
கட்டணம் குறைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 3 நாடுகளில் புதிய சந்தா திட்டங்களையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த பட்டியலில் துரதிருஷ்டவசமாக இந்தியாவின் பெயர் இடம்பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் அடிப்படை சந்தா திட்டத்திற்கு ரூ.149 வசூலிக்கப்படுகிறது.
புதிய நடைமுறை:
சமீபத்தில் வந்த அறிவிப்பின்படி, ஒரு வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஸ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் கூறுகையில், ”நெட்ஃபிளிக்ஸ் கணக்கை ஒரு குடும்பம் மட்டும் பயன்படுத்துவதற்குரியது. ஒரு வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் ஒரு நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம். அதாவது, வீட்டில், பயணத்தில், விடுமுறையில் எங்கிருந்தாலும் பயன்படுத்தலாம்" என்று நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க