மேலும் அறிய

Aadhar Card | ஆதார் கார்டுல அட்ரஸ மாத்தணுமா? ஈஸியா இந்த புது ஸ்டெப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

ஆதாரில் முகவரியினை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான முகவரிச்சான்று உள்ளிட்ட 32 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்து ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம்செய்ய வேண்டும் என UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற வழிமுறையினை  இனி தொடரப்போவதில்லை என UIDAI தெரிவித்துள்ளது.

ஆதார் என்பது 12 இலக்க எண் கொண்ட முக்கிய ஆவணமாகும். அரசு மற்றும் அரசு சாரா வேலைகள் அனைத்திற்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாக உள்ளது. அதோடு மட்டுமின்றி ஒரு செல்போன் நம்பர், கேஸ் இணைப்பு போன்றவை வாங்க வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு இல்லாமல் எந்தப் பணியினையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். மேலும் தற்போது உள்ள இந்த கொரோனா காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றால் ஆதார் எண் அத்தியாவசியமாக உள்ளது.

Aadhar Card | ஆதார் கார்டுல அட்ரஸ மாத்தணுமா? ஈஸியா இந்த புது ஸ்டெப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

உதாரணமாக நாம் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், வேறு இடத்திற்கு இடம் பெயர்கிறோம் என்றால், ஆதாரில் உள்ள முகவரியினையும் கட்டாயம் மாற்றவேண்டும். இல்லாவிடில் அப்பகுதியில் கிடைக்கக்கூடிய எந்தவித அரசு திட்டங்களையும், நம்மால் பெற முடியாது. இச்சூழலில் தான் ஆதார் கார்டில் முகவரியினை மாற்றுவதற்கு யாரையும் தேடி நாடி செல்லாமல், வீட்டில் இருந்தே ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம் செய்துக்கொள்வதற்கான வசதியினை UIDAI கொண்டிருந்தது. 

குறிப்பாக குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர்கள், வீட்டின் உரிமையாளர் போன்றவர்கள் மூலம் ஆதார் முகவரியைச் சரிபார்த்து ஒப்புதல் பெறலாம். இந்த முறையைப் பயன்படுத்த ஆதார் முகவரி மாற்றம் கோருபவரும் அதனைச் சரிபார்ப்பவரும் தங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இருவருக்குமே தங்களுக்குக் கிடைக்கும் பாஸ்வேர்ட் (OTP) மூலம் இந்த முகவரி மாற்றத்தை பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக, முகவரி மாற்றத்தைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்க குடும்ப உறுப்பினரோ, உறவினர், நண்பர்களோ, வீட்டு உரிமையாளரோ சம்மதம் தெரிவிக்க வேண்டும். இப்படி எந்தவித ஆவணமும் இல்லாமலும் ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது.

Aadhar Card | ஆதார் கார்டுல அட்ரஸ மாத்தணுமா? ஈஸியா இந்த புது ஸ்டெப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!

ஆனால், ஆதார் கார்டில் முன்பு இருந்தது போன்று எந்த ஆவணமும் இல்லாமல் முகவரியினை மாற்றக்கூடிய நிலை நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து UIDAI ஒரு ட்விட்டர் பயனருக்கு அளித்த பதிலில், ஆதாரில் முகவரியினை மாற்றம் செய்ய வேண்டும் என்றால், மக்கள் அதற்கான முகவரிச் சான்று உள்ளிட்ட 32 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்து ஆதார் அட்டையில் முகவரியினை மாற்றம் செய்யலாம் எனக்கூறியுள்ளது.  எனவே இந்நிலையில், உங்களது ஆதார் அட்டையில் முகவரியை மாற்றம் செய்வதற்கு இனி இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

முதலில், ssup.uidai.gov.in/ssup/ என்ற இணைய தளப்பக்கத்தினை ஓப்பன் செய்துக்கொள்ள வேண்டும்.

இதில்  Update Aadhaar என்பதனை க்ளிக் செய்யவும்.

பின்னர், அதில் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டினை உள்ளீடு செய்யவும். இதில் OTP னை கிளிக் செய்ய வேண்டும்.

இதனையடுத்து ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை உள்ளீடு செய்து login என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

உள்ளே நுழைந்ததும் உங்களது ஆதார் அட்டையின் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

இறுதியில் முகவரிச்சான்றிற்கு தகுந்த 32 ஆவணங்களின் பட்டியில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முகவரியினை மாற்றம் செய்யவேண்டும்.

தலைப்பு செய்திகள்

Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
Embed widget