One Plus Nord 2T 5G: ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடல் மொபைலுக்கு சவால் விடும் டாப் 5 மொபைல்கள்!
வேகமான ப்ராஸசர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை உள்ளடக்கியது.மார்க்கெட்டில் இந்த போனின் விலை (8GB+128GB மாடல்) ரூ.28,999 ஆகவும் (12GB+256GB மாடல்) ரூ.38,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒன் பிளஸ் மாடல் போன்கள் கடந்த ஒரு வருடத்தில், மாதத்திற்கு ஒரு மாடல் என்கிற விகிதத்தில் ரிலீஸ் செய்து அசத்தியது. ஒன் பிளஸ் ரக போன்களில் லேட்டஸ்டாக ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடல் வெளியானது. இந்த மொபைல் வேகமான ப்ராஸசர் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை உள்ளடக்கியது. மார்க்கெட்டில் இந்த போனின் விலை (8GB+128GB மாடல்) ரூ.28,999 ஆகவும் (12GB+256GB மாடல்) ரூ.38,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக மொபைல் வாங்குபவர்களிடையே இது பெறும் கவனத்தை பெற்றது. ஆனாலும் இதற்கு போட்டியாக சந்தையில் பல மொபைல்கள் உள்ளன.
பண மதிப்பிற்கு ஏற்றப்படி நீண்ட நாள் உழைக்கக்கூடிய மொபைல்களின் பட்டியலில் ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடலும் ஒன்று. உங்கள் பட்ஜெட்டில் மொபைல் வாங்குவதற்காக 25,000 முதல் 30,000 ஒதுக்கியிருந்தால் நிச்சயமாக கீழே குறிப்பிட்டுள்ள 5 மொபைல்களும் ஒன் பிளஸ் நார்டு 2T 5G(One Plus Nord 2T 5G) ஈடாக வேற லெவலில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
1. iQoo Neo6 5G
விலை : ரூ.29,999 முதல்
இந்த மொபைலில் பெரிய டிஸ்பிளே,ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடலுக்கு நிகரான கேமரா அமைப்பு ஆகியவை இதன் தனி சிறப்பாகும். அதுமட்டுமன்றி நியோ6 5G யில் ஒன் பிளஸ் நார்டு 2T 5G விட பெரிய பாட்டரி உள்ளது.
2.Poco F4 5G
விலை : ரூ.27,999 முதல்
போக்கோ மொபைலில் 64 மெகா பிக்சல் ஷூட்டர் உள்ளது.இந்த மொபைலிலும் பெரிய டிஸ்பிளே,பெரிய பேட்டரி மற்றும் அதிக மெகா பிக்சல் கொண்ட, பேக் கேமரா ஆகியவை இதன் பிளஸ் பாயிண்டாகும்.
3.Xiaomi 11i HyperCharge 5G
விலை : ரூ.26,999 முதல்
இந்த மொபைல் 5G நெட்வர்க்கை மட்டும் சப்போர்ட் செய்வதனால் மார்க்கெட்டில் இது மக்களிடையே கவனத்தை பெறவில்லை. ஆனாலும் இதன் மற்ற தனித்துவங்கள் ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடலுக்கு நிகரானது.
4.Samsung Galaxy A53 5G
விலை : ரூ.31, 499 முதல்
இந்த மொபைல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. சற்று விலை கூடுதலாக இருந்தாலும் ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடலுக்கு டஃப் கொடுக்க கூடிய ஒன்று.
5.Motorola Edge 30 5G:
விலை : ரூ.27,999 முதல்
இந்த மொபைலில் இரண்டு 50 மெகா பிக்சல் கேமராகள் உள்ளன. அதுபோக நீட் பர்ஃபாமன்ஸ் இதன் கூடுதல் சிறப்பாகும்.
உங்களுக்கு எது விருப்பமோ, அதை நீங்களே தேர்வு செய்து ஷாப்பிங் செய்யலாம்.
Also Read | Redmi 10A | பட்ஜெட் விலையில் மொபைல் வாங்கனுமா ? ரெட்மியின் புதிய மொபைலை try பண்ணுங்க!