One plus 10T 5G : ஒன் பிளஸ் 10T 5G மொபைல் வாங்க ஐடியா இருக்கா? இத கொஞ்சம் படிச்சு பாருங்க..
One plus 10T 5G : ஒன் பிளஸ் 10T 5G மொபைலில், அலர்ட் ஸ்லைடர் எனும் வசதி இருக்காது என ஒன் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
One plus 10T 5G : ஒன் பிளஸ் 10T 5G மொபைலில், அலர்ட் ஸ்லைடர் எனும் வசதி இருக்காது என ஒன் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அலர்ட் ஸ்லைடரின் மூலம் ஒன் பிளஸ் பயனாளிகள் சுலபமாக ஆடியோ வசதியை இயக்க முடியும்.
அதிக வாட்டேஜ் சார்ஜிங், பெரிய பேட்டரி திறன் மற்றும் சிறந்த ஆண்டெனா சிக்னல் ஆகியவற்றிற்கு தேவையான இடத்தை ஒதுக்க ஒன் பிளஸ் நிறுவனமானது இந்த அலர்ட் ஸ்லைடர் வசதியை நீக்கியுள்ளது.அலர்ட் ஸ்லைடர் ஆப்ஷனை ஒன் பிளஸ் 10T 5G மட்டுமல்லாமல் ஒன் பிளஸ் நார்டு CE 2 5G மற்றும் ஒன் பிளஸ் 10R மொபைல்களிலும் நீக்கப்பட்டு இருந்தது. மியூட் பட்டன் வசதி இல்லாமல் சந்தைக்கு வெளிவரும் முதல் ஒன் பிளஸ் போன் இதுவே.
நேர்காணல் ஒன்றில், ஒன்பிளஸ் தலைமை வடிவமைப்பாளர் கூறியதாவது, “அலர்ட் ஸ்லைடர் பாக்க சிறிதாக இருந்தாலும், ஸ்மார்ட்போனின் மதர்போர்டில் 30 சதுர மிமீ அளவு தேவைப்படுகிறது. ஒன் பிளஸ் பயன்பாட்டாளர்களை நாங்கள் அதிகம் மதிக்கிறோம், முதலில் அலர்ட் ஸ்லைடர் ஆப்ஷனை வைத்து வடிவமைத்தோம்.மொபைல் போன் மிக கணமாக இருந்ததால், வேறு வழி
இல்லாமல் அலர்ட் ஸ்லைடரை நீக்கினோம்.”
Stream nonstop ▶️
— OnePlus (@oneplus) July 21, 2022
Game with abandon 🕹
Shoot for the stars 📸#EvolveBeyondSpeed with the #OnePlus10T's @Snapdragon 8+ Gen 1 5G Mobile Platform
ஒன் பிளஸ் 9 சீரிஸில் (One plus 9 Series) இடம்பெற்ற Hasselblad பிராண்டட் கேமராக்கள் 10T 5Gயில் நீக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா நிக்கப்பட்டதிற்கான காரணம் வெளியாகவில்லை ஆனால், ஒன் பிளஸ் நிறுவனமானது நிற்நயம் செய்யப்பட்ட விலையில் தரமான மொபைல் வழங்க வேண்டும் என கூறியுள்ளது.ஒன் பிளஸ் 10T 5G விலை ஒன் பிளஸ் 10 Pro விலையை விட குறைவாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒன் பிளஸ் 10 Pro-வின் விலை ரூ.66,999 என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன் பிளஸ் 10T 5G-யில் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கபடும் என்றும் 50-மெகாபிக்சல் IMX766 சென்சார் இடம்பெறும் என்றும் OnePlus
வெளிப்படுத்தியுள்ளது.இந்த மொபைல்கள் கருப்பு மற்றும் பச்சை ஆகிய இரு நிறங்களில் ஆகஸ்ட் 3, 2022 வெளியாகவுள்ளது.
Also Read : One Plus Nord 2T 5G: ஒன் பிளஸ் நார்டு 2T 5G மாடல் மொபைலுக்கு சவால் விடும் டாப் 5 மொபைல்கள்!