Apple iPhone 16 Pro: A18 ப்ரோசிப்புடன் அறிமுகமான ஐபோன் 16 ப்ரோ - அம்சங்கள், வசதிகள், விலை விவரங்கள் உள்ளே..!
Apple iPhone 16 Pro: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 ப்ரோ மாடல்கள், A18 ப்ரோசிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Apple iPhone 16 Pro: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 ப்ரோ மாடல்களின், அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலை விவரங்களை இங்கே அறியலாம்.
ஐபோன் 16 ப்ரோ அறிமுகம்:
ஆப்பிள் நிறுவனம் தனது க்ளோடைம் நிகக்ஷ்ச்சியின் மூலம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மெலிதான பெசல்களைப் பெறுகிறது. அதன் மேம்படுத்தப்பட்ட ப்ரோ-மோஷன் டிஸ்ப்ளேவை எடுத்துக்காட்டுகிறது. ஆப்பிள் தனது ஐபோன் 16 ப்ரோவை "அதிர்ச்சியூட்டும் புதிய வடிவமைப்பு" என்று விவரித்துள்ளது. iPhone 16 அடிப்படை மாடல்களைப் போலின்றி, iPhone 16 Pro ஆனது A18 Pro சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்டேண்டர் A18 ஐ விட சிறந்த செயல்திறனை வழங்குகிறது. மேலும் இது அதே இரண்டாம் தலைமுறை 3nm கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. வேகம் மற்றும் செயல்திறன் என இரண்டிலும், A17 ஐ விஞ்சும் 16-கோர் நியூரல் இன்ஜினை உள்ளடக்கியது.
ஐபோன் 16 ப்ரோ மெல்லிய பார்டர்களுடன், எப்போதும் ஆன் டிஸ்பிளேயுடன் வருகிறது. கூடுதல் ஆயுளுக்காக செராமிக் கவசத்தை கொண்டுள்ளது. கிரேட் 5 டைட்டானியத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இது போட்டியாளர்கள் பயன்படுத்தியதை விட வலிமையானது மற்றும் ஸ்க்ரேட்ச்-எதிர்ப்புத் திறன் கொண்டது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
iPhone 16 Pro, iPhone 16 Pro விலைகள்:
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலைகள் அமெரிக்காவில் முறையே $999 மற்றும் $1199 இல் தொடங்குகின்றன. சமீபத்திய ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் புதிய "டெசர்ட் டைட்டானியம்" (தங்கம்) மற்றும் வழக்கமான வெள்ளை, கருப்பு மற்றும் நேட்சுரல் டைட்டானியம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த புதிய தங்க டைட்டானியம் கடந்த ஆண்டு ஐபோன் 15 ப்ரோவில் இருந்த நீல டைட்டானியத்திற்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி சேமிப்புத் திறன்களில் வழங்கப்படுகின்றன. ஐபோன் 15 ப்ரோ சீரிஸின் அதே விலைக் கட்டமைப்பைப் ஐபோன் 16 சீரிஸ் பின்பற்றுகிறது.
iPhone 16 Pro மற்றும் Pro Max ஆனது Apple A18 Pro சிப்செட்டைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு சூப்பர் பிரீமியம் ஐபோன் மாடல்களுக்கு, மிகவும் மேம்பட்ட சிலிக்கானை மட்டுமே கொண்டு வரும் தனது கொள்கையை ஆப்பிள் தொடர்கிறது. A18 ப்ரோ சிப் 16-கோர் நியூரல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இது iPhone 15 Pro உடன் ஒப்பிடும்போது AI செயல்பாடுகளை 20 சதவிகிதம் வரை வேகமாகச் செயல்பட உதவுகிறது.
iPhone 16 Pro, iPhone 16 Pro மேக்ஸின் அம்சங்கள் & கேமரா:
ஐபோன் 16 சீரிஸின் டாப் எண்ட்கள் டெலிஃபோட்டோ லென்ஸ்கள் போன்ற சில பிரீமியத்திற்கு மட்டுமே ஆன அம்சங்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன. ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டும் 5x ஆப்டிகல் ஜூமைக் கொண்டுள்ளன. முன்னதாக இது பெரிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் மட்டுமே இருந்தது. தற்போது பெரிய பேட்டரி மட்டுமே ஐபோன் 16 ப்ரோவை, ப்ரோ மேக்ஸிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளன. இது 2x மேக்ரோ ஜூம் மற்றும் ஆப்பிள் முதல், 4K வீடியோவில் வினாடிக்கு 120 பிரேம்களில் புதிய சென்சார் கொண்டுள்ளது. இந்த போன்கள் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமராவை அதன் பின்புற ஷூட்டர் ட்ரையோவைச் சுற்றிக் காட்டுகின்றன.
குபெர்டினோவை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் 16 ப்ரோ "முன்பை விட" அதிக தெளிவுத்திறன் மற்றும் அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. சாதனம் 48-மெகாபிக்சல் 'ஃப்யூஷன் கேமரா' ஒரு மேம்படுத்தப்பட்ட தற்காலிக சேமிப்புடன், நகரும் பொருள்களின் தரமான படங்களை அனுமதிக்கிறது. ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஒரு குவாட்-பிக்சல் சென்சார் கொண்ட 48MP அல்ட்ரா-வைட் கேமராவை அறிமுகப்படுத்துகிறது. முந்தைய மாடல்களில் இருந்து 12MP 5x டெலிஃபோட்டோ கேமராவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெட்ரா ப்ரிஸம் வடிவமைப்பு ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது. கூடுதல் செயல்பாட்டிற்காக புதிய கேமரா கட்டுப்பாடு அம்சமும் புரோ தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் பெரிய பேட்டரியுடன் வருகின்றன, இது எந்த காலத்திற்குமான சிறந்த ஐபோன் பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இரண்டும், ப்ரோ அல்லாத மாடல்களுடன் இப்போது ஆப்பிள் இன்டலிஜென்ஸை ஆதரிக்கிறது. இதில் கூகுள் லென்ஸ் போன்ற புதிய விஷுவல் இன்டெலிஜென்ஸ் அம்சம் உள்ளது, பயனர்கள் புதிய கேமரா பட்டன் மூலம் அடையாளங்கள் மற்றும் பொருட்களைப் பற்றிய தகவல்களை உடனடியாகப் பெறுவதற்கு அவற்றைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கிறது.