Honor 200 Lite 5G: அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
Honor 200 Lite 5G: ஹானர் வெளியிட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட்ஃபோன் பற்றிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
பிரபல ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான ஹானர் தனது புதிய மாடலான ஹானர் 200 லைட் 5G அறிமுகப்படுத்தியுள்ளது.
108MP டிரிப்பிள் ரியர் கேமரா, 50MP செல்ஃபி கேமரா,MediaTek Dimensity 6080 சிப், 4,500mAh பேட்டரி, 35 வாட் அதிக வேக சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. Android 14 MagicOS 8.0 ஸ்சாஃப்வேர், ஏ.ஐ. ஆப்சன் உடன் வருகிறது.
டிஸ்ப்ளே:
6.7-inch full-HD+ AMOLED டிஸ்ப்ளே 2,412 x 1,080 பிக்சல், 2,000 நிட்ஸ், 3,240Hz PWM ஃபிலிக்கர் ஃப்ரி பயன்பாடு கொண்டுள்ளது. 8GB of RAM, 256GB ஸ்டோரேஜ், 108MP மெயின் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் என கேமரா டீடெய்ல்ஸ் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 5G, சைட் மவுண்டட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளிட்டவைகளுடன் வருகிறது.
விலை எவ்வளவு?
ஹானர் 200 லைட் 5G 17,999 ஆக நிர்ணயிம் செய்யப்பட்டுள்ளது. 8GB RAM, 256GB ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது. இது செப்டம்பர் 27-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். ப்ரீ புக் செய்தும் பெறலாம். எஸ்.பி.ஐ. கார்டு உள்ளவர்கள் ரூ.2000 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.