மேலும் அறிய

iPhone 14 Launched: அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட iPhone 14 Pro மாடல்கள்! கூடுதல் விவரங்கள் உள்ளே!

இதோடு crash-detection என்னும் புதிய வசதியும் இடம்பெறுகிறது. இது பயனாளார்கள் சுயநினைவின்றி இருக்கும் பொழுது அவர்களது மொபைல் தானாகவே அவசர எண்ணை தொடர்புக்கொள்ளும்.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் , தனது புதிய படைப்புகளை அறிமுகப்படுத்துவது வழக்கம் . அந்த வகையில் நேற்று ( புதன்கிழமை) நடைப்பெற்ற 'ஃபார் அவுட்' நிகழ்வில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 14 மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.  அதாவது Phone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max. என்னும் வகையில் அறிமுகமாகியுள்ள மொபைல்போன்களில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ சிறிய திரை கொண்ட மாடல்களாக இருக்கின்றன. ஆனால்  ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை பெரிய திரைகளை விரும்புவோரை இலக்காகக் கொண்டவை. கூடுதலாக ஐபோன் ப்ரோ மூலம் மீண்டும் ஆப்பிள் லிமிட்டட் மாடலான iPhone X இன் டிசைனை கொண்டுள்ளது.

iPhone 14 Launched: அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  ஸ்டீலால் உருவாக்கப்பட்ட iPhone 14 Pro மாடல்கள்! கூடுதல் விவரங்கள் உள்ளே!
கடந்த ஆண்டு ப்ரோ அல்லாத மாடல்கள் மட்டும் Apple A15 Bionic SoC களுடன் வந்தன, ஆனால் இம்முறை  Pro மாடல்கள் லேட்டஸ்ட் Apple Bionic A16 SoC ஐ பெற்றுள்ளன. இம்முறை அமெரிக்காவில் மட்டும்  இ-சிம் முறைகள் வசதிகளோடு மொபைல்போன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வைஃபை வசதிகள் இல்லாத அதி நவீன தொழில்நுட்பமும் இடம்பெடறவுள்ளது. இதோடு இம்முறை அவசர தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது செயற்கைக்கோள் வழியாக SOS செய்தியை அனுப்ப பயன்படுகிறது. இந்த அம்சம் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் கிடைக்கும். இதோடு crash-detection என்னும் புதிய வசதியும் இடம்பெறுகிறது. இது பயனாளார்கள் சுயநினைவின்றி இருக்கும் பொழுது அவர்களது மொபைல் தானாகவே அவசர எண்ணை தொடர்புக்கொள்ளும்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்!
:

iPhone 14 Pro வசதிகள் :

ப்ரோ மாடல்களைப் பொறுத்த வரை,  அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துருப்பிடிக்காத உலோகத்தை பயன்படுத்தியுள்ளது.இது சிராய்ப்பு மற்றும் அரிப்பை எதிர்க்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ ஆப்பிளின் ப்ரோமோஷன் புதுப்பிப்பு வீத அம்சத்துடன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஆல்வேஸ் ஆன் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வந்துள்ளது. smoother motion  மற்றும் power-efficient system ஆகியவற்றை  1Hz வரை அளவிட முடியும்.outdoor peak brightness  ஐ 2,000 நிட்கள் வரை வழங்குகிறது. இது ஐபோன் 13 ப்ரோவை ஒப்பிடும் பொழுது இரு மடங்கு பிரகாசமாக உள்ளது. ப்ரோ ஆனது செராமிக் ஷீல்டு கிளாசுடன் வருகிறது.  மற்ற எந்த‌ ஸ்மார்ட்போன் கண்ணாடியையும் விட கடினமானது என்று கூறப்படுகிறது.

iPhone 14 Launched: அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  ஸ்டீலால் உருவாக்கப்பட்ட iPhone 14 Pro மாடல்கள்! கூடுதல் விவரங்கள் உள்ளே!

ஆப்பிளின் வழக்கமான ட்ரெண்ட்-செட்டிங் நாட்ச்க்கு பதிலாக மாத்திரை வடிவ துளை-பஞ்ச் கட்அவுட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது.ஆப்பிள் இதை டைனமிக் ஐலேண்ட் என்று அழைக்கிறது, ஹூட்டின் கீழ் ஆப்பிளின் புதிய இன்-ஹவுஸ் A16 பயோனிக் SoC உள்ளது, இது ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த சிப் என்கிறது ஆப்பிள்.இது இரண்டு உயர் செயல்திறன் கோர்கள் மற்றும் நான்கு உயர் செயல்திறன் கோர்களைக் கொண்டுள்ளது. புதிய 6-கோர் CPU ஆனது போட்டியை விட 40 சதவீதம் வரை வேகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. A16 Bionic SoC ஆனது, 50 சதவிகிதம் அதிக நினைவக அலைவரிசையுடன் கூடிய துரிதப்படுத்தப்பட்ட 5-கோர் GPU மற்றும் ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட 17 டிரில்லியன் செயல்பாடுகளைச் செய்யக்கூடிய புதிய 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. CPU, GPU, Neural Engine மற்றும் இமேஜ் சிக்னல் செயலி ஆகியவை கேமராவில் மேஜிக் செய்யுமாம். அதாவது ஒரு புகைப்படம் எடுக்கும் பொழுது இவை மூன்றும் சேர்ந்து 4 டிரில்லியன் செயல்பாடுகளைச் செய்யும் என்கிறது ஆப்பிள் .

கேமராவை பொருத்தவரையில் இரண்டாம் தலைமுறை சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட புதிய 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், எஃப்/2.8 அபெர்ச்சர் லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. மூன்றாவது 12-மெகாபிக்சல் சென்சார் f/2.2 அபர்ச்சர் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 120 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ உள்ளது.சிறந்த குறைந்த-ஒளி செயல்திறனை வழங்குவதாகக் கூறப்படும் ஃபோட்டானிக் இன்ஜினையும் கொண்டுள்ளது - முன்பக்க‌ கேமராவில் 2x வரை, அல்ட்ரா வைட் கேமராவில் 3x வரை, டெலிஃபோட்டோ கேமராவில் 2x வரை, மற்றும் TrueDepth முன்பக்கத்தில் 2x வரை 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் f/1.9 துளை லென்ஸ் கொண்ட கேமரா உள்ளது.

iPhone 14 Pro Max வசதிகள் :

ஐபோன் ப்ரோவை விட திரை அளவு அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை பயன்படுத்தலாம். 6.7-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே அதே ஆப்பிளின் ப்ரோமோஷன் புதுப்பிப்பு வீத அம்சத்துடன் கிடைக்கிறது. இது மூன்று பின்புற கேமரா மற்றும் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள அனைத்து வசதிகளுடனும் வருகிறது.

iPhone 14 Launched: அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  ஸ்டீலால் உருவாக்கப்பட்ட iPhone 14 Pro மாடல்கள்! கூடுதல் விவரங்கள் உள்ளே!
விலை விவரங்கள் :

ஐபோன் 14 ப்ரோவின் விலை $999 (தோராயமாக ரூ. 79,555) மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை $1,099 (தோராயமாக ரூ. 87,530) இல் இருந்து தொடங்குகிறது. இந்த மாடல்களின்  முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி  தொடங்கவுள்ளது.  செப்டம்பர் 16 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. டீப் பர்பிள், கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

இந்தியாவில் iPhone 14 Pro விலை ரூ. 1,29,900 மற்றும் iPhone 14 Pro Max ரூ. 1,39,900. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளர்கள் மூலம் மொபைலை ஆடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
Neet exam 2025 : ஆன்லைன் தேர்வு இல்லை! இந்த ஆண்டு நீட் தேர்வு இப்படி தான் நடக்கும்! NTA அறிவிப்பு...
"சம்பளம் உயரப்போகுது" அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி கொடுத்த கிரீன் சிக்னல்!
"அதிக குழந்தைகளை பெத்துக்கலனா.. தேர்தலில் போட்டியிட முடியாது" இறுக்கி பிடித்த சந்திரபாபு நாயுடு
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
சைஃப் அலிகானை குத்தியது யார்? படிக்கட்டில் இருந்து இறங்கும் மர்ம நபர்.. பரபர CCTV காட்சி!
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Ranji Trophy; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...
ரஞ்சிக் கோப்பை; கல்தா கொடுத்த கோலி... கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்...
Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
AjithKumar Racing; அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
அஜித்குமார் ரேஸிங் அணி வீரரின் இன்ஸ்டா பதிவு... என்ன சொல்லியிருக்கார்.?
Embed widget