(Source: ECI/ABP News/ABP Majha)
Meta Messenger: Facebook மெசஞ்சரில் வந்தாச்சு புது அப்டேட்.. இனிமே செம்ம ஜாலிதான்..
Meta: மெசஞ்சரில் கிடைக்கும் புதிய அப்டேட் என்ன?
மெட்டா நிறுவனத்தின் மெசஞ்சர் அப்பில் புதிதாக வாய்ஸ் மற்றும் விடீயோ கால் அழைப்புகளுக்கான பிரத்யேக வசதியை வழங்க இருக்கிறது.
ஃபேஸ்புக் மெசஞ்சரில் கீழே உள்ள ஃபங்ஷன் டேபில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான பிரத்யேக ஐகான் ஒன்றை வெளியிடுகிறது.
மெசஞ்சரில் புதிய அப்டேட்டாக "அரட்டைகள்", "கதைகள்" மற்றும் "மக்கள்" ஆகியவற்றுடன் தோன்றும், டெபிள் மேலும் வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான தனியாக வழங்குகிறது. பயனர்கள் தங்கள் மெசஞ்சரை ஓப்பன் செய்தால் அதிலிருந்து யாருக்கு அழைக்க வேண்டுமோ எளிதாக இருக்கும். அதாவது, தற்போது நடைமுறையில் இருப்பதுபடி, நாம் யாரை அழைக்க வேண்டுமோ, அவருடைய ‘சாட்’ விண்டோவிற்கு சென்று அதில் வலதுபுறம் அழைப்பதற்கான ‘ஃபோன்’ ஐகான வழங்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது நண்பர்களை தொடர்பு கொள்வது எளிதாவிட்டது.
#Meta (@Meta) is rolling out a dedicated tab for audio and video calls to the function bar at the bottom of the #Messenger app. pic.twitter.com/nCJjPEbye5
— IANS (@ians_india) June 2, 2022
நீங்கள் மெட்டா மெசஞ்சரை திறந்தாலே அதில் ‘ஃபோன்’ ஐகான் இருக்கும். அது மூலம் யாருக்கு கால் செய்ய வேண்டுமோ செய்யாலம்றியது.
புதிய அம்சம் பயனர்களை நேரடியாக நண்பர்களுக்கு டயல் செய்ய அனுமதிக்கிறது, மேலும் மெசஞ்சரின் அழைப்பு அம்சங்களைப் பற்றி குறைவாகப் பரிச்சயமானவர்களுக்கு அறிமுகமாகவும் இருக்கலாம்.
Meta-வின் தகவலின் படி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து Messenger இல் மேற்கொள்ளப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங்கிற்கான அம்சங்களை விரிவுபடுத்தியது. ரியாக்சன்ஸ், ஸ்டிக்கர்கள், மெசேஜ் சார்ந்த பதில்கள் மற்றும் பகிர்தல் ஆகியவற்றைச் சேர்த்து புதிய அப்டேட்களை வழங்கியது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 2023 இல் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை இயல்புநிலையாக மாற்றுவதே நிறுவனத்தின் திட்டமாகும். இதன் மூலம் மெசஞ்சரை ஒரு Call Communication வழங்கும் செயலியாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்